இன்றைய நற்செய்தி:

மாற்கு 9:14-29

“இவ்வகை பேய் இறைவேண்டலினாலும், நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது.”

அருள்மொழி:

பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
மாற்கு 9:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, தீய ஆவி பிடித்திருந்த சிறுவனை நலமாக்குகின்றார். சீடர்களிடம் அச்சிறுவனை அவன் தந்தை கொண்டு வந்து, “ஐயா, என் மகன் பல வருடங்களாகப் பேய் பிடித்து இருக்கிறான். தீய ஆவி அவனைப் பல முறை கொல்லப் பார்க்கின்றது” என்று முறையிட்டார். சீடர்கள் முயற்சித்தும் அவர்களால் தீய ஆவியை ஓட்ட முடியவில்லை . அந்த வேளையில் இறைமகன் அங்கு வந்து, “நீர் இவர்களோடு எதைப் பற்றி வாதாடுகிறீர்” என்று கேட்கிறார். அதற்கு, “தீய ஆவி பிடித்து என் மகன் சாகும் நிலையில் உள்ளான்” என்றார். “இவர்களால் குணப்படுத்த முடியவில்லை என்றதும் நம்பிக்கையற்ற தலைமுறையனோடு எத்துணைக் காலம் உம்மோடு இருக்க முடியும்” என்று அந்தச் சிறுவனை நோக்கி, “நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்று கூறினார். அவனும் நம்புகிறேன் என்றதும், நம்பிக்கையின்மையை நீக்க உதவும் என்றதும், இயேசு, “ஊமை செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன், ஓடிப் போ” என்று விரட்டுகின்றார். சிறுவன் நலமானான்.

சுயஆய்வு :

  1. இறைவாக்கின் மீது நம்பிக்கை கொள்கிறேனா?
  2. நம்பிக்கை என் வாழ்வில் மலர்ந்திட என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, என் நம்பிக்கையின்மை நீங்கும் வரம் தாரும். ஆமென்.