ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழா
இன்றைய அருள்வாக்கு

மாற்கு 16:15-20

"ஆண்டவர் இயேசு 40ம் நாள் விண்ணேற்றம் அடைந்து தந்தையின் வலப்பக்கம் அமர்ந்தார்.”

அருள்மொழி :

நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.
மாற்கு 16:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, விண்ணகத்திற்கு ஏறிச் சென்று தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்தார். சீடர்களும் இறைமகன் விட்டுச் சென்ற “படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்ற வேதவாக்கு இன்று உலகிலுள்ள அனைத்து மாந்தருக்கும் அறிவிக்கும் பணியாளர்கள் அதிகரித்துக் கொண்டேயிருப்பதை ஊடகங்களின் வாயிலாகவும், தனி நபர் முதல் குழுவாகவும், திருத்தலங்கள், போதனைக் கூடங்கள் வாயிலாகவும் பறைசாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். அதே வேளையில், “நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்ற புனித பவுலடியாரின் வரிகள் ஒவ்வொருவருடைய இதயத்தின் ஆழத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாக சாலைகள் தோறும், ஊர்கள் தோறும் அறச்செயல்களால் நற்செய்திப் பணி தொடர்வதை நாம் அறிகின்றோம்.

சுயஆய்வு :

  1. ஆண்டவரின் வாக்கைப் புரிந்து செயல்படுகிறேனா?
  2. ஆண்டவரின் விண்ணேற்பு உணர்த்தும் செய்தி யாது?

இறைவேண்டல்:

உமது மண்ணக வருகையின் நோக்கத்தை எடுத்துக் கூறும் வரம் தாரும். ஆமென்.