இன்றைய நற்செய்தி:

யோவான் 16:5-11

"நான் உங்களிடம் கூறுவது உண்மையே. நான் தந்தையிடம் போவதால், தூய ஆவி உங்களிடம் வருவார்.”

அருள்மொழி:

இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.
லூக்கா 10:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, விண்ணகம் சென்று தூய ஆவியை அனுப்புகிறார் என்பதை இங்கே பதிவு செய்கின்றார். நான் சென்றால் தூய ஆவியார் உங்களிடம் வருவார். சீடர்கள், இறைமகனை, நீங்கள் எங்கே போகின்றீர்கள் என்று கேட்கும் முன்னரே, அவர் நடக்கப் போவதை வெளிப்படுத்துகின்றார். தூய ஆவியார், இயேசுவைப் பற்றிச் சான்று பகர்வார். அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துக்கள் தவறானவை என்று சுட்டிக் காட்டுவார். காரணம், இறைமகனின் போதனைகளை உலகம் ஏற்க மறுத்து விட்டது. எனவே தூய ஆவியார் வந்து விளக்கம் கொடுப்பார். உண்மையை நோக்கி வழிநடத்தும் துணையாளர் என்றென்றும் நம்மிலும் உலகின் கடையெல்லை வரை நிறைந்துள்ளார்.

சுயஆய்வு:

  1. இறைமகனின் வாக்கு எப்படி இருந்தது? அறிகின்றேனா?
  2. தூய ஆவியாரை அறிகின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உலகம் முடியும் வரை எந்நாளும் என்னை வழிநடத்திடும் தூய ஆவியாரை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.