இன்றைய நற்செய்தி

யோவான் 15:1-8

" "நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது.”

அருள்மொழி :

நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது..
யோவான் 15:8

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, “நானே உண்மையான திராட்சைச் செடி. என் தந்தையே அதனை நட்டு வளர்க்கின்றார். திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும் அவருடைய உறுப்புக்கள் மற்றும் கிளைகளாக இருக்கின்றோம். செடி மிகுந்த கனி தர வேண்டுமாகில், அதன் கிளைகளாகிய நாமும் தூய வாழ்வு வாழ்ந்து, இறை - மனித உறவில் சங்கமித்து, ஏழை எளியோரின் சிரிப்பில் இறைவனைக் காணும்போது, நாம் மிகுந்த கனி தருபவர்களாகின்றோம். நாம் பாவம் செய்யும்போது அதன் கிளைகள் தறிக்கப்பட்டு, ஒப்புரவு அருட்சாதனத்தால் மீண்டும் தளிர் விடுகின்றோம். எனவேதான் இறைமகன், “மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தையின் விருப்பம்' என்கின்றார்,

சுயஆய்வு :

  1. வாழ்வு தரும் உணவு நானே! என்பவரை அறிகிறேனா?
  2. அவரது உணவைப் பெற என் தயாரிப்பு?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! நிலை வாழ்வை தரும் உமது உணவில் நான் சங்கமிக்கும் வரம் தாரும் ஆமென்.