அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 9

இன்றைய நற்செய்தி

யோவான் 21:1-14

இன்றைய புனிதர்

 St Casilda

புனித காஸில்டா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். யோவான் 21:14.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தம் எழுவருக்கு மூன்றாம் முறையாகத் தோன்றுகிறார். உயிர்த்தப் பின்புத் தம் சீடர்களை நாடித் திபேரியக் கடல் வழியாகச் சென்றார். அங்குச் சீமோன் பேதுரு, தோமா, நத்தானியேல், வேறு சில சீடர்களும் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மீன் ஒன்றும் கிடைக்காதபோது இயேசு அவர்களைக் கண்டார். பிள்ளைகளே மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா? என்று கேட்டு வலையை வலப்பக்கத்தில் வீசுங்கள் என்றார். மீன் வலைக் கிழியும் அளவுக்கு அதுவும் பெரிய மீன்கள் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று இருந்தது. இதன் எண்ணிக்கைச் செபமாலை நாம் சொல்வது 153 மணிகள் செபமாலைக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்தது. சிலமீன்களைக் கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டு உணவு அருந்த வாருங்கள் என்று கூப்பிட்டார். அப்பமும் மீனும் தயாராக இருந்தது. எடுத்துத் தம் சீடர்க்குக் கொடுத்தார். அவர்களும் உண்டனர். இஃது உயிர்த்தப் பின்பு மூன்றாவது முறையாகும். அவர் உயிருடன் உள்ளார். என்பதற்குச் சான்றாகும்..

சுய ஆய்வு

  1. உயிர்த்த இயேசுவை நான் அறிகிறேனா?
  2. அவரது உணவு பரிமாற்றம் உணர்த்தும் செய்தி யாது?

இறைவேண்டல்

அன்பு உயிர்த்த இயேசுவே! உமது உயிர்ப்பு என் போன்ற பாவிகளுக்கு எழுச்சியாகிடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு