அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 7

இன்றைய நற்செய்தி

லூக்கா 24:13-35

இன்றைய புனிதர்

St John Baptist de la Salle

தெலசால் நகர் புனித ஜான் பாப்டிஸ்ட்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்களிடம், "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. லூக்கா 24:31

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு எம்மாவுச் சீடர்களுக்குத் தோன்றுகிறார். அவர் மெசியா தான் என்று அவரது கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அவரோடு உயிர்த்த ஆண்டவரைப் பற்றி உரையாடல் செய்து வந்தனர். அவர்களது வீட்டிற்குச் சென்று பந்தியமர்ந்து ஆப்பத்தை எடுத்துப் பிட்டு இறைபுகழ்பாடி அதனைப் பகிர்ந்தளித்த போது அவர்களது அககண்கள் திறக்கப்பட்டது. இறைமகனைக் கண்டு தொழுது மகிழ்ந்தனர். எனவே நாமும் இவ்வுலக மாயைகளில் திளைத்து உண்மை வழியைத் தொலைத்து நமது கடவுயைத் தரிசிக்கும் நிலையைத் தொலைத்து விட்டுத் தடுமாறுகின்றோம். எனவே இறையான்மையில் திளைத்து நமது பாங்களுக்குப் பரிகாரம் செய்தும் இறை - மனித - உறவில் சங்கமித்து வாழ இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது. அதனால் இறைவனில் சங்கமிப்போம்.

சுய ஆய்வு

  1. என் கண்கள் இறைபிரசன்னத்தைக் காண்கிறதா?
  2. ஆண்டவரைக் காண எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது பிரசன்னத்தில் ழுழ்கி உம்மோடு உறைந்திடும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு