அருள்வாக்கு இன்று

ஏப்ரல் - 3

இன்றைய நற்செய்தி

யோவான் 12:24

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால் தான் மிகுந்த விளச்சலை அளிக்கும். யோவான் 12:24

வார்த்தை வாழ்வாக:

யாருக்கும் இனி நீ அடிமையல்ல!
தோல்விக்கு நீ பயந்தவனல்ல!
விலைமதிப்பில்லா என் இரத்தத் துளிகள்!
உன்னை என் பக்கம் இழுத்துக்கொண்டது!
தட்டுத் சிகரத்தை நீ தொட்டுவிட்டாய்!
தோல்விகள் உன்னை இனி தீண்டாது!
துன்பங்கள் இனி உன்னை வாட்டாது!
கஷ்டங்கள் இனி உன்னை நெருக்காது!
நோய்கள் உன்னை நெருங்காது!

ஏனெனில், உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன். நீ எனக்கு உரியவன். நீர் நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன். ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை முழ்கடிக்கமாட்டா. நெருப்பு உன்மேல் பற்றி எரியாது. ஏனெனில் என் பார்வையில் நீ விலையேறப்பெற்றவன். மதிப்பு மிக்கவன். நான் உன்மேல் அன்பு கூர்கிறேன்.

சுய ஆய்வு

  1. விதையின் ஆற்றலை அறிகிறேனா?
  2. அதிக விளைச்சல் தர என் பங்கு யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! புதைக்கப்படும் விதைகள் மடிந்துபோவதில்லை,அது மீண்டும் மண்ணைப் பிளந்துத் துளைத்தெழும் என்கிற நம்பிக்கை விதைகள் என்பதை உணர்ந்து வாழ வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு