arulvakku

பிப்ரவரி 22 சனி

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 16:13-19

" தன்னலம் துறந்துத் தம் சிலுவைச் சுமக்கட்டும் "

அருள்மொழி:

'என்னைப் பின்பற்ற விரும்புவன் எவரும் தன்னலம் துறந்துத் தம் சிலுவையத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
மத் 16 :18

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு கட்டிய திருச்சபையை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார். எப்படி எனில் கத்தோலிக்கத் திருச்சபையானது திருதந்தை எனும் பேதுருவின் மீது கட்டப்பட்டதாகும். பாறை என்றால் உறுதியானது என்று பொருள். இதன் மீது எனது திருச்சபையைக் கட்டுகின்றேன். இதனை எந்த விதத் தீய சக்திகளும் அழிக்க முடியாது என்று உறுதியாகச் சொல்கின்றார். ஆனால் நம்மில் குறை விசுவாசம் கொண்டோர், சுய லாபத்திற்காகப் பலர் இறைவார்த்தைகளைப் பணமாக்கித் தன் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை உணர முடியாத வறியோர் தங்களின் உணர்ச்சிகளுக்கு விடைக் கிடைக்கின்றது என்ற மாயை நம்பிப் பல பிரிவினைச் சபைகளில் ஊடுருவிச் செல்கின்றனர். இதனை உணர்த்தப் பொது நிலையினராகிய நாம் முதலில் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், மறைநூலை மறுவாசிப்புச் செய்யவும், பயிற்சிப் பாசறைகளை நாடித் தெளிவுப் பெறுவோம்.

சுயஆய்வு :

  1. என் விசுவாசம் பாறையின் மீது கட்டப்பட்டுள்ளதா?
  2. இதனைத் தெளிவுப்படுத்திக் கொள்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம் திருச்சபையின் கீழ் நான் கட்டப்பட்ட உறுதியான கிறிஸ்துவனாக வாழ வரம் அருளும். ஆமென்.


www.anbinmadal.org