arulvakku

பிப்ரவரி 21 வெள்ளி

இன்றைய நற்செய்தி:

மாற்கு 8: 34-9:1

" தன்னலம் துறந்துத் தம் சிலுவைச் சுமக்கட்டும் "

அருள்மொழி:

'என்னைப் பின்பற்ற விரும்புவன் எவரும் தன்னலம் துறந்துத் தம் சிலுவையத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
மாற்கு 8: 34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு என்னைப் பின் தொடர்பவர்கள் தன்னலம் (சுயநலம்) துறந்துப் பொதுநலத்திற்காக என்ன துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு செல்பவனே, என்னைப் பின் தொடர்பவன் என்கின்றார். அன்றும் சரி, இன்றும் சரி சுயநலவாதிகள் தான் பலர் பெருகி மக்களைச் சுரண்டி வாழ்கின்றனர். பொதுவாக அரசுத் தரும் சலுகைகளைக் கூட மக்களுக்குக் கொடுக்க மனமில்லாமல் தங்கள் உறவினர்கள் வழியாகவே அனைத்தையும் சுரண்டும் நிலை இன்று. எனவே தான் பிறர் நலனில் முக்கியத்துவம் கொடுத்து அதனால் ஏற்படும் துன்பங்களைத் தாங்குபவர்களே என் நண்பர்கள் என்கின்றார் இயேசு.

சுயஆய்வு :

  1. நான் சுயநலம் கருதாமல் பொதுநலம் காண விழைகிறேனா?
  2. அதற்கான எனது முயற்சி என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நன் என்னைத் துறந்து அடுத்தவருக்காக உழைக்கும் நல் மனதினைத் தாரும். ஆமென்.


www.anbinmadal.org