arulvakku

பெப்ருவரி 11 செவ்வாய்

இன்றைய நற்செய்தி:

மாற்கு 7:1-13

" வெளியிலிருந்து செல்பவை மனிதரை தீட்டுபடுத்தாது. "

அருள்மொழி:

வெளியிலிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் திட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே தீட்டுப்படுத்தும்.
மாற்கு 7:

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மூதாதையர் மரபு பற்றிப் பேசும் பரிசேயர் சதுசேயர் மறைநூல் அறிஞர்களுக்கு நல்ல பாடம் புகட்டுகின்றார். உம் சீடர்கள் கைகளைக் கழுவாமல் உணவு உண்பது தீட்டு இல்லையா? என்றதும் இறைமகன் தீட்டு என்பது நீங்கள் செய்கின்ற செயல்கள் எத்தகையது? இம்மக்கள் உதட்டிகால் என்னை விட்டு வெகுதாலைவில் உள்ளது! மனிதக் கட்டளைகளை மதிக்கின்றவர்கள் கடவுளின் கட்டளைகளை நழுவ விடுகின்றார்கள். "உன் தாய் தந்தையை மதித்த நட" என்கிறது கட்டளை. ஆனால் மனதில் இறுத்திக் கொள்ளாமல் கை வழுவாமலிருப்பது குற்றமா? என்பதைச் சிந்திக்கத் தூண்டுகின்றர். புறத்தூய்மையை விமர்சிக்கும் நாம் அகத்தூய்மையை மறந்து விடுகின்றோம். அகம் புறம் இரண்டும் ஒன்றிணையும் போது இறை - மனித உறவு சங்கமாகின்றது என்பதை உணர்ந்திடுவோம்.

சுயஆய்வு :

  1. மரபு என்றால் என்ன?அறிகிறேனா?
  2. பெற்று கொண்ட கட்டளை உணர்ந்தும் செய்தி அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! புறத்தூய்மை -அகத்தூய்மையோடு வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org