பிப்ரவரி 20 புதன்

இன்றைய நற்செய்தி:

மாற்கு. 8: 22-26

"முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்."

அருள்மொழி:

இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.
மாற்கு. 8:25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மீண்டும் ஓர் அற்புதத்தைச் செய்கிறார். பார்வையற்றவர்க்குப் பார்வை தருகிறார். அவரால் தொடப்பட்ட மனிதர் பார்வை பெறுகிறார். அதுவும் தெளிவானப் பார்வைப் பெறுகிறார். பார்வைப் பெற்றவரை அவரது வீட்டிற்கு சென்று தனது மகிழ்ச்சிவைப் பகிர்ந்துகொள்ளச் செய்கிறார். நாமும் இயேசுவால் தொடப்பட்டால் நற்பார்வைப் பெறமுடியும். நலமும், வளமும் பெற அவரிடம் செபிப்போம்.

சுயஆய்வு :

  1. இயேசுவின் தொடுதலை உணர்கின்றேனா?
  2. இதனை மேற்கொள்ள எனது மனநிலை என்ன?

இறை வேண்டல்:

இறைவா, நல்வழி காட்டுகின்ற இயேசுவை நாங்கள் உறுதிபடைத்த நெஞ்சோடு பின்பற்றிட அருள்தாரும். ஆமென்.


www.anbinmadal.org