பிப்ரவரி, 8 - வெள்ளி

இன்றைய நற்செய்தி:

மாற்கு 6:14-29

"காழ்ப்புணர்வு."

அருள்மொழி :

அப்போது ஏரோதியர் அவர் மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரை கொலை செய்ய விரும்பினாள். ஆனால் அவர்களால் இயலவில்லை.
மாற்கு 6:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானின் பணியைத் துணிச்சலை ஏற்க மனமில்லாத ஏரோதியால் தன் தவறைச் சுட்டிகாட்டியவரைப் பழி வாங்க முனைகின்றாள். காழ்ப்புணர்வு என்றால் மனதுக்குள்ளேயே அவரை எப்படி எப்போது ஒழித்து விடலாமென்று கங்ஙனம் கட்டிக் கொள்கின்றாள். அவளது குற்றத்தை ஏற்க மறந்து விடுகின்றாள். சுட்டிகாட்டியவரைப் பழிவாங்கத் துடிக்கின்றாள். ஆம் சகோதரர்களே! இன்றும் அனேகர் தவறு செய்பவர்களைச் சுட்டிகாட்டும்போது பெரிய பூகம்பமே வெடிக்கின்றது. இன்றும் குற்றம் செய்தவர் குற்றத்தை ஏற்பதற்குப் பதில் பழிவாங்கும் நிலையே ஓங்கியுள்ளது. எனவே சிந்திப்போம். செயல்படுவோம்.

சுயஆய்வு :

  1. நான் தவறு செய்யும் போது உணர்கின்றேனா?
  2. அடுத்தவர் சுட்டிக்காட்டும் போது ஏற்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் தவறு செய்தாலும் அதற்காக மனம் வருந்தி மன்னிப்புப் பெறும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org