அருள்வாக்கு இன்று
ஜனவரி 29, வெள்ளி
இன்றைய நற்செய்தி
மாற்கு 4:26-34
இன்றைய புனிதர்

புனித கெசாரியுஸ்
மாற்கு 4:26-34
புனித கெசாரியுஸ்
”அது விதைக்கப்பட்ட பின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவிற்குப் பெருங்கிளைகள் விடும்” என்றார். மாற். 4:32
இன்றைய நற்செய்தியில் இயேசு, கடுகு விதைக்கு இறைவார்த்தையை ஒப்பிடுகின்றார். அதாவது விதைச் சிறியதாக இருப்பினுன் அது நல்ல பண்பட்ட நிலத்தில் ஊன்றபட்டால் அது வளர்ந்துத் தழைத்துப் பெரிதாகிப் பலர் அதன் நிழலில் இளைப்பாறுவர். அது போல அன்றும் சரி இன்றும் சரி இறைவார்த்தையெனும் போராளியான விதை நல்லவர் உள்ளத்தில் ஊன்றபட்டால் அது பலரின் துயர் துடைக்கும் அருமருந்தகும் என்பதே இந்த உவமையின் கருபொருள். எனவே சகோதர்களே நாம் பண்பட்ட நிலமாக மாறுவோம். அடுத்தவருக்கு வழிகாட்டியாவோம். இதையே இறைமகன் உவமைகளால் நமக்கு உணர்த்துகின்றார்.
அன்பு இயேசுவே! நான் எனது என்ற மமதையை விட்டு இறங்கி வந்து ஏழைகளின் துயர் துடைக்கும் கருவியாக மாற வரம் தாரும். ஆமென்.