அருள்வாக்கு இன்று

ஜனவரி 28, வியாழன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 4:21-25

இன்றைய புனிதர்

Saint Thomas Aquinas

புனித தாமஸ் அக்கிவினாஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எனெனில் உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று அவர்களிடம் கூறினார். மாற்கு 4-25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தையானது ஒருவரின் வாழ்வில் ஊன்றப்பட்டு அது நூறுமடங்காகப் பலனிக்கும்போது அடுத்தவர்களும் அதன் பலனை அனுபவிப்பார்கள். இதற்கு இறைவன் இன்னும் மிகுதியாக அருள் வரங்களைப் பொழிந்துச் செழித்து வளரச் செய்வார் என்பதே நோக்கம். ஆனால் இறைவார்த்தையைப் பெற்று அதனைத் தான் மட்டும் சுவைத்து அடுத்தவருக்காக எந்தப் பலனும் அளிக்காமல், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் வாழ்பவர்களிடம் உள்ளதையும் எடுத்து, இல்லாதவருக்கு வழங்கப்படும் என்று இயேசு கூறுகின்றார். எனவே இனி மகன் விரும்பும் மக்களாய் வாழ்வோம் என்று உறுதிக் கொள்வோம்.

சுய ஆய்வு

  1. இறைவார்த்தையின்படி வாழ்வது என்ன என்பதை உணர்கின்றேனா?
  2. உணர்ந்து அதன்படி வாழ எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

ன்பு இயேசுவே! நான் உமது வார்த்தைகளின் களஞ்சியமாக மாறி அடுத்தவரை வழிகாட்டும் ஒரு கருவியாக மாற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு