அருள்வாக்கு இன்று

ஜனவரி 24, ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 1:14-20

இன்றைய புனிதர்

Saint Francis de Sales

சலேசு நகர் புனித பிரான்சிஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டு விட்டு அவர் பின் சென்றார்கள். மாற்கு 1:21

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, அன்புச் சீடரான யோவானையும் யாக்கோப்பையும் தேர்ந்து கொண்டார். தேர்ந்து கொண்ட அனைவரையும் எவ்வாறு பணிச் செய்ய வேண்டும் என்பதை விளக்கி இருவர் இருவராக அவர்களை அனுப்புகின்றார். உடன் தொடர்ந்தச் சீடர்களும் தங்கள் வீட்டில் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு இறைமகனைப் பின் தொடர்ந்தார்கள். அன்று முதல் இன்று வரை இறைமகனின் பணித் தொடர்கின்றது. அதையே நமக்கும் அழைப்பு விடுக்கின்றார். ஏற்போம் உள்ளத்தில், பணியாற்றுவோம் சமுதாயத்தில். இதுவே இயேசு நம்க்கு விடுக்கும் அழைப்பு.

சுய ஆய்வு

  1. எனது அழைப்பை உணர்கின்றேனா?
  2. உணர்ந்துச் செயல்பட என் முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் எனக்கு நீர் விடுத்த அழைப்பை ஏற்றுப் பணியாற்ற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு