அருள்வாக்கு இன்று
ஜனவரி 23, சனி
இன்றைய நற்செய்தி
மாற்கு 3:20-21
இன்றைய புனிதர்

மாற்கு 3:20-21
அவருடைய உறவினர் இதைக் கேள்விபட்டு, அவரை பிடித்துக் கொண்டு வரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதி மயங்கி இருக்கின்றார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மாற்கு 3:21
இன்றைய நற்செய்தியில் இயேசு மதிமயங்கி இருக்கின்றார் என்று பேசிக் கொண்டனர். காரணம் அவர் தந்தையின் ஆணைபடி மக்களின் நோய்களை குணபடுத்தியும், தனக்கு தேவையான சீடர்களை தேர்வு செய்து கொண்டும் தொடர்ந்து இறை தன்மையில் ஆழ்ந்து பணி செய்து கொண்டிருந்தார். தூய ஆவியின் ஆற்றல் அவருள் குடிகொண்டிருந்தது. அவருக்கு ஓய்வின்றிருந்தார். எனவே தான் மக்கள் அவரை மதிமயங்கியுள்ளார் என்றனர். ஆம் அன்பர்களே! நாம் தூய ஆவியின் ஆற்றலால் தொடர் பணியாற்றும் போது வல்லமையோடும் விவேகத்தோடும் பணி செய்ய தூண்டுதல் பெறுகின்றோம். அப்பொழுது நாம் செய்பவை நமக்கே தெரியாது உணர்வு பெற்ற பின் நமக்கே ஆச்சரியமாய் தெரியும்.
அன்பு இயேசுவே! உமது பாதையை நானும் பின்பற்றி வாழும் வரம் தாரும். ஆமென்.