அருள்வாக்கு இன்று

ஜனவரி 20, புதன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 3:1-6

இன்றைய புனிதர்

 Saint Sebastian

புனித செபஸ்தியார்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின்பு அவர்களிடம் "ஓய்வு நாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை? என்று கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்." மாற்கு 3:4

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு ஓய்வு நாள் என்பது எப்படி எதற்கெல்லம் செலவழிக்க வேண்டும் என்று விளக்குகின்றார்.(உம்.) ஒருவர் சாகும் தருவாயில் இருந்தால் அவருக்கு உடனடிச் சிகிச்சையளித்து உயிரைக் காப்பது தானே நீதி.அப்படியிருக்க அந்தத் திருசட்டப் பெயரால் அப்பாவி மக்களை நடத்திய விதம் இன்றும் நடைபெறும் பல சுயநலவாதிகளிடையே உருவாகி கொண்டுதான் வருகின்றது. எனவே ஓய்வு நாளை விட அடுத்தவரின் நலனில் அக்கரைக் காட்டுவது இறையரசின் கொள்ளையாகும். இதனை இன்றைக்கும் நமக்கு நினைவு கூர்கின்றார். அவரது செய்பாடுகளை நாமும் வாழ்வாக்குவோம்.

சுய ஆய்வு

  1. ஒருவருக்கு ஆபத்துக் காலத்தில் உதவிப் புரிகின்றேனா?
  2. அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் நேரம், காலம் பாராமல் அடுத்தவருக்காய் உதவும் நல் மனதினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு