அருள்வாக்கு இன்று

ஜனவரி 13, புதன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 1:29-39

இன்றைய புனிதர்

Saint Hilary

புனித ஹிலிரி

தகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாற்கு 1:31

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு சீமோன் பேதுருவின் மாமியார் காய்ச்சலைக் குணப்படுத்துகின்றார். இன்னும் பலரும் குணம் பெற்றனர். இயேசு சீமோன் மாமியாரைத் தூக்கியதுமே அவரது கடும் காய்ச்சல் குணமானது. அங்கே தூயஆவியின் ஆற்றலை நாம் காண்கின்றோம். எப்படிஎனில் இறைமகன் இயேசு தூய ஆவியால் தான் கருதாப்க்கப்பட்டார். பணிவாழ்வுக்கு வரும் போது திருமுழுக்கினால் தன் தந்தையின் பெயரால் புறாவடிவில் ஆவியானவர் அவரில் இறங்கினார். முழுமையாக இவரைப் பெற்றுக் கொண்டு நோன்பையும் கடைபிடித்துச் சமுதாயப்பணிக்குச் செல்கின்;றார். இறை மகனே இவ்வாறு பணியாற்றும் போது நாமும் இறைவனின் ஆசீரையும், ஆவியானவரின் கொடைகளையும் இயேசுவின் பணிகளை இச்சமுதாயத்தில் தடம் பதிக்க நம்மை முதலில் திடபடுத்திப் பணிவாழ்வை மேற்கொள்வோம். வாரீர்

சுய ஆய்வு

  1. நான் எந்த நிலையிலும் மூவொரு இறைவனைப் பெற்றுக் கொள்ளத் தயாரா?
  2. பெற்றுக் கொண்டவர்களை என்னில் நிறுத்திப் பணியாற்ற நான் தயாரா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! மூவொரு இறைவனை நான் என்னில் பெற்று உமது பணிகளை இத்தரணியில் செய்திட வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு