அருள்வாக்கு இன்று

ஜனவரி3, ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மத்தேயு 2:1-12

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா

3kings
தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். மத்தேயு 2:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் ஞானிகள் குழந்தை இயேசு பாலனை கண்டு மகிழ்ந்த காட்சி பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். முன்று தினங்களில் தன் மகனைக் கண்டு அனைவருக்கும் அறிவித்து -நீங்கள் அஞ்சாதீர்கள் என் மகன் வழியாக உங்களுக்கு மீட்பு கிடைக்கும் நீங்கள் அனைவரும் மகிழும் நாள் தான் இத்திருக்காட்சி. எனவே தான் இறைவன் முத்திசையிலிருந்தும் தன் மகனைக் கண்டு தரிசித்து அனைத்து மாந்தரும் நலம் பெறும் பொருட்டு இக்காட்சியை விளக்குகின்றார். ஆம் மக்களே! தீயோரின் பார்வைக்கு இறைபிரசன்னம் கிடைக்காது என்பது ஏரோது போன்றவர்களுக்கு ஒரு சாட்டையடி. எனவே இவ்வுலக மாயையைகளை தொலைத்துவிட்டு நிறைவாழ்வை பெரும் பொருட்டு நம் அருகிலிருக்கும் நலிந்தோரைக் கண்டு கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வோமா?

சுய ஆய்வு

  1. என் தேடல் எப்படி பட்டது?
  2. ஞானிகள் கண்ட மட்டில்லாப் பெருமகிழ்ச்சி என்னிடம் உள்ளதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! ஞானிகளை போல் உம் தரிசனத்தை நோயுற்றோர் நலிந்தோர் வறியோர்களின் பங்கேற்ப்பில் இணைந்து பணி செய்ய வரம் தாரும்.

அன்பின்மடல் முகப்பு