திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 11-ஆம் நாள் - திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரம் - புதன்கிழமை

“இளைப்பாறுதலுக்கான வாக்குறுதி”

வாசகங்கள்: : எசாயா 40:25-31; மத்தேயு 11:28-30

மறைநூல் வாக்கு:

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28)

சிந்தனை:

வேலை செய்பவர்கள் எல்லாருமே ஒரு கட்டத்தில் வேலைப்பளுவின் காரணமாகக் களைத்து சோர்வடைகிறார்கள் என்பது உண்மையே. எந்தவொரு பணியுமே ஒரு அளவுக்கு மேல் அந்தப் பணியாளரின் உடலிலுல், மனவலிமையிலும் சலிப்பையும், இயலாமையையும் தருவதால், அவ்வப்போது ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகிறது. இயேசு வழ்ந்த காலத்தில், திருச்சட்ட விதிகள் அனைத்தையும் மக்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதை யூத மதத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், இயேசு மாறுபட்ட வழிமுறையை எடுத்துரைக்கிறார். பரிசேயர்கள் காட்டியதைப் போலக் கடுமையாக இல்லாமல், இயேசுவின் வழிமுறை அழுத்தம் இல்லாததாகவும், எளிமையானதாகவும் இருக்கிறது. ஆதிக்கம் செலுத்துவதற்கோ, கட்டுபடுத்துவதற்கோ மெசியா வரவில்லை. மாறாக, வலிமையான புதிய வாழ்வை அளிப்பதற்கே அவர் வந்தார்.

உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் இயேசு தன் தோளில் சுமந்தார். ஆயினும், “என் சுமை எளிதாயுள்ளது” என்று கூறுகிறார். "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்" என்னும் இயேசுவின் வார்த்தைகள் ஆழமான குறிப்பை உணர்த்துகின்றன. தனது பொதுவாழ்வின்போது, ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்று, மக்கள் கூட்டத்திற்கு இறையரசை அறிவித்து வருகின்ற வேளையில், தனது மனித உடலின் வரம்புகளையும் கவனத்தில் கொண்டிருந்தார். ஒருநாள் முழுவதும் போதனைகளையும், நலமளித்தலையும் செய்து வந்தபின்னர், தனது சீடர்களிடமிருந்து ஒதுங்கித் தனிமையான இடத்திற்குச் சென்றார். ஒரு கட்டத்தில், கடலில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட கடுமையான புயற்காற்றின்போதும் அவர் தூங்கிக் கொண்டிருந்தார் என் வாசிக்கிறோம்.

இறைவேண்டல்:

இளைப்பாறுதல் தருகின்ற இறைவா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்கு இளைப்பாறுதல் தரக் காத்திருப்பவரே! இதோ உம் திருமுன் வருகின்றோம். நாங்கள் எதிர்கொள்கின்ற எல்லாக் கவலைகளையும் மாற்றி எங்களுக்கு ஆறுதலும், நலமும் அளித்தருளும்.

அன்பின்மடல் முகப்பு