திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 5-ஆம் நாள் - திருவருகைக் காலத்தின் முதல் வாரம் - வியாழக்கிழமை

“ஒன்றிணைந்து நம்பிக்கைக் கொள்வோம்”

வாசகங்கள்: எசாயா 26:1-6; மத்தேயு 7:21, 24-27

மறைநூல் வாக்கு:

“ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்” (எசாயா 26:4)

சிந்தனை:

பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டுப் புலம் பெயர்ந்து பல ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்து, தங்கள் வாழ்வாதரங்களையே முற்றிலும் இழந்துவிட்ட இஸ்ராயேல் மக்களைப் பார்த்து, “ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்“ என்று இறைவாக்கினர் எசாயா அழைப்பு விடுக்கிறார். நிர்கதியாக நின்றிருந்த அந்த மக்களுக்கு எந்தவொரு பயனுமில்லாத வெற்றுரைகளின் மீது ஈடுபாடு இல்லாத ஒரு கட்டத்தில், “ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று கூறுகின்ற இறைவாக்கினர் எசாயா, ‘கடவுள் என்ன செய்வார், எப்போது செய்வார்’ என்றெல்லாம் சொல்லவில்லை; மாறாக, கடவுளின் வல்லமை, “என்றுமுள கற்பாறை“ போன்று திடமானது என்று உரைக்கின்றார். இஸ்ராயேல் மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருந்த உறுதியான உறவின் மீது அவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.


மீது அவர்களின் கவனத்தை ஈர்க்கிறார். மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒள்ளும் நம்பிக்கையே நீடித்து நிலைக்கும் என்னும் உண்மையை இறைவாக்கினர் எசாயா தெளிவாக அறிந்திருந்தார். நம்மையெல்லாம் தம்முடைய அன்பால் முழுமையாக நிறைத்து காத்து வருகின்ற கடவுளின் மீது நமது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை இந்தத் திருவருகைக் காலத்தில் எண்ணிப் பார்ப்போம்.

இறைவேண்டல்:

என்றுமுள கற்பாறையான இறைவா! உமது தெய்வீக அருளால் எங்களை நிறைத்தருளும்: நிலையான உமது அன்பினால் எங்களைப் பேணிக் காத்த்ருளும்; தூய்மை மிகுந்த உமது ஆவியால் எங்களுக்கு வலுவூட்டியருளும்.


அன்பின்மடல் முகப்பு