மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் பெருவிழா
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
இணைச் சட்டம் 8:2-3,14ஆ-16ஆ | 1கொரிந்தியர் 10:16-17 | யோவான் 6: 51-58

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


நமது உறவை நிரந்தர உறவாக்கிக் கொண்டார் .

போலி உறவுகள் , சுயநல உறவுகள் சந்தர்ப்பவாத உறவுகள் , இப்படிப்பட்ட உறவுகளில் வாழும் மனிதரை நிலையான, நிரந்தரமான, இணைப்பிரியாத இதய உறவுக்கு இன்றைய திருவழிபாடு அழைக்கின்றது. மீட்பின் வரலாற்றில் பல வழிகளில் இறைவன் தனது உறவைப் புதுப்பித்துள்ளார் . மன்னாவைப் பொழிந்தும் , பாறையில் இருந்து தண்ணீரைத் தந்தும் , தனது உறவை புதுப்பித்துக் கொண்டார் என்று பழைய ஏற்பாடு சான்று பகர்கிறது. துன்பத்திலும் , துயரத்திலும் , உணவு ஒருவனுக்கு கை கொடுக்கிறது. பாலைவனத்திலும் மக்களின் பசியைப் போக்க மன்னா அளிக்கப்பட்டது (முதல் வாசகம் ).  

விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு நானே. இதை உண்பவர் வாழ்வு பெறுவர் (யோவா. 6:51). இங்கு மனித உறவும் , இறை உறவும் இணைகிறது. நற்கருணைப் பற்றிய இயேசுவின் போதனையும் , அதில் உள்ள அழுத்தமும் , உறுதியும் வேறு எந்த போதனையிலும் காணப்படவில்லை எனலாம் . காரணம் வத்திக்கான் சங்கம் சொல்வதுபோல, இதுவே கிறிஸ்துவ வாழ்வின் மையமாகவும் ஊற்றாகவும் அமைகிறது.  

இயேசு தனது உடலையும் , இரத்தத்தையும் கையளிப்பதில் இரண்டு முக்கிய அம்சங்களைக் காண முடிகிறது. உடலை உண்பது இயேசுவின் வாழ்வில் பங்கு கொள்வது. இரத்தத்தைப் பருகுவது அவரது இறப்பில் பங்கு கொள்வதாகும் . உயிர்தரும் இரத்தம் கடவுளுக்கு மட்டும்தான் சொந்தம் . கடவுளுக்குச் சொந்தமானதை, இயேசு எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கிறார் . இயேசு நமக்காகத் தனது உடலையும் இரத்தத்தையும் கொடுக்க முன் வந்தார் . தனக்கு அடையாளம் கொடுத்த உடலும் , இரத்தமும் , நமக்குள் வந்து, நாம் , அவரைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக உணவின் வடிவில் தனது உடலையும் இரத்தத்தையும் நமக்குக் கொடுத்து நமது உறவை நிரந்தர உறவாக்கிக் கொண்டார் .  

இன்றைய . உறவுகள் பல சமயங்களில் இதயத்தை இருட்டாக்கி, உதட்டில் மட்டும் பூசிக் கொள்ளும் சாயமான போலி உறவுகளே. உறவுகள் தொலைபேசியில் தொடங்கி, தொலை  .. பேசியிலேயே  துண்டிக்கப்படுகின்றன.  இன்டர்நெட்டிலே  தொடங்கி இன்டர்நெட்டிலேயே முடிந்துவிடுகிறது. ஆதியில் ஆதாமின் உறவு பசுமையாக இருந்தது. அது பாதியிலேயே பாழாய்ப் போனது. இருப்பினும் படைத்தவரை, காத்தவரை, வழிநடத்தியவரை ஏனோ அவர்கள் மறந்துவிட்டார்கள் . அங்கு உறவு என்பது கரிசல் மண்ணில் ஏற்பட்ட விரிசலானது. இருப்பினும் , இறைவன் சோர்ந்து போகவுமில்லை, அவர்களைக் கைவிடவும் இல்லை. மாறாக அவர்களின் பசியையும் , தாகத்தையும் தணித்தார் . இறுதியில் உறவின் உச்சக்கட்டமாகத் தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார் . உறவுக்கு நிரந்தர உருவம் கொடுக்க உதயமானார் இறைமகன் இயேசு.  

உறவுகளின் உச்சக்கட்ட, இறுதிக்கட்ட வெளிப்பாடாக இயேசு தனது உடலையும் இரத்தத்தையும் நமக்குக் கொடுத்துப் பாவிகளோடும் , உள்ளம் உடைந்தவர்களோடும் , முடவர் களோடும் , செவிடர்களோடும் , குருடர்களோடும் ஓடிச் சென்று தனது உறவைப் புதுப்பித்துக் கொண்டார் . இவரின் உறவு நிலைத்திருக்கக் கூடியது, நிரந்தரமானது, நிதமும் சுவைக்கக் கூடியது. ஆனால் எப்படி அவரின் உறவில் நாம் நிலைத்திருப்பது என்பதுதான் இன்று நம் இதயம் எழுப்பும் கேள்வியாக உள்ளது.  

எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் . நானும் அவரில் நிலையான உறவில் நிலைத்திருப்பேன் என்றார் .  

ஓர் இளைஞன் இறக்கும் தருவாயில் இருந்தார் . அவர் மருத்துவரை நோக்கி எனது உறுப்புகளாகிய கண்களையும் , சிறுநீரகங்களையும் எடுத்து, தேவைப்படுவோருக்குக் கொடுங்கள் என்றார் . இவனது கண்களால் , பார்வை இழந்த இருவர் பார்வை பெற்றனர் . உயிருக்குப் போராடிய இருவருக்கு சிறுநீரகம் கொடுக்கப்பட்டது. இறுதியில் அவன் இறந்தாலும் , நான்கு உயிர்களின் உறவுகளைப் புதுப்பிக்க அவன் காரணமானான் . இதைத்தான் புனித பவுல் நாம் இயேசுவுக்குள்ளும் , இயேசு நமக்குள்ளும் நிலைத்திருந்தால் , நாம் மிகுந்த கனி தரும் மரமாவோம் என்கிறார் .  

உறவு என்பது தேங்கிய குட்டையல்ல. மாறாக ஓடுகின்ற - அருவி போன்றது. அப்படிப்பட்ட உறவில் நாம் உயிர் வாழ்வதைத் தெரிந்துகொள்ள உடலும் , நாம் நம்மையே தெரிந்துகொள்ள இரத்தமும் உதவுகிறது. கசப்பான நிகழ்வுகளை மறந்து, நமது இதயத்துக்கு இதமான, இனிமையான உறவைத் தனது உடலாகவும் , இரத்தமாகவும் கொடுத்தார் . வன்முறை யினாலும் , அடிப்படைவாதத்தினாலும் மனித உறவுகளை இழந்து, வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதருக்கு நிலையான உறவு தந்தார் .

கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் அடையாள முறையில் , தகுந்த மனநிலையோடு நாம் உட்கொள்ளும்போது அவரின் உறவில் நிலைத்திருக்கிறோம் . வாழ்வின் உணர்வை, ஒன்றிப்பின் உணர்வை உண்டு, கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம் .

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

புதிய சிந்தனைகள் வேண்டும்  

பக்தன் ஒருவன் பல நாள்கள் , பல மாதங்கள் இறைவனை நோக்கி வரம் கேட்டு மன்றாடினான் . ஒரு நாள் கடவுள் அவனுக்குக் காட்சியளித்து, உனக்கு என்ன வேண்டும் ? என்றார் . பக்தனோ கடவுளைப் பார்த்து, எதைக்கேட்டாலும் கொடுப்பாயா ? என்றான் . கடவுளோ, எதைக் கேட்டாலும் கொடுப்பேன் என்றார் . பக்தனோ, எதைக் கேட்டாலும் கொடுப்பேன் என்று சொல்லும் அளவுக்கு உம்மிடம் ஒரு தாராள மனமிருக்கின்றதா? என்று கேட்க, கடவுள் , ஆம் என்று சொல்ல, பக்தன் , அந்த மனத்தை எனக்குக் கொடு என்றான் . கடவுள் அந்த பக்தனைப் பார்த்து, நான் சொன்ன சொல் தவறமாட்டேன் . நீ கேட்ட என் மனத்தைத் தருகின்றேன் . சற்று கால அவகாசம் கொடு என்றார் . பக்தனும் சரி என்றான் .  

காலச் சக்கரம் சுழன்றது. நாள்கள் இரவு பகலென மாறின ; மாதங்கள் மறைந்தன; ஆண்டுகள் உருண்டோழன. மனிதனின் ஆசையைக் கடவுள் நிறைவேற்றும் நாள் பிறந்தது. கடவுள் மனிதனாகப் பிறந்தார் . 33 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறப்பதற்கு முந்தின நாள் இரவு, இயேசு பன்னிருவரை அழைத்து பந்தியிலே அமர்ந்து அவரது உடலையும் , இரத்தத்தையும் அவர்களுக்கு அளித்தார் [நற்செய்தி] ; அவருடைய உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார் ; மனிதன் வரமாகக் கேட்ட அவருடைய மனத்தை அவனுக்கு ஈந்தார் .  

நற்கருணையில் வாழும் இறைவனை நாம் உணவாக உட்கொள்ளும்போது நமக்கு ஏற்படும் நன்மைகளில் ஒன்று அவருடைய மனமாக நம் மனம் மாறுகின்ற அரிய வாய்ப்பு! புனித பவுலழகளார் கிறிஸ்து இயேசு கொண்ழருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் [பிலி 2:5] என்கின்றார் .

இயேசுவின் மனம் எப்பழப்பட்டது என்பது நமக்குத் தெரியும் . இயேசுவின் மனம் - கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதாத மனம் [பிலி 2:6]. இயேசுவின் மனம் -அது தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பான மனம் .

இயேசுவின் மனம் - அது சாவை ஏற்கும்
அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தன்னையே தாழ்த்திக்கொண்ட மனம் .

இன்றைய உலகுக்கு மிகவும் தேவையானவை புதிய சிந்தனைகள் !

பணத்தால் ஆகாதது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
பகிர்தலால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.
பதவியால் ஆகாது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
பாசத்தால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.
அழகால் ஆகாதது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
அடக்கத்தால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.
போரால் ஆகாது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
பொறுமையால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.
அதிகாரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை - இது பழைய சிந்தனை.
அரவணைப்பால் ஆகாதது ஒன்றுமில்லை - இது புதிய சிந்தனை.

புதிய சிந்தனைகளை நாம் எந்தச் சந்தையிலும் வாங்க முழயாது! இவை கடையில் பெறும் பொருள்கள் அல்ல! மாறாக இவை புதிய வானத்திற்கும் , புதிய பூமிக்கும் சொந்தக்காரரான இயேசு நமக்குத் தரும் ஆசிகள் . அவற்றை நற்கருணையின் வழியாக நமக்குத் தர அவரே தினம் தினம் முன்வருகின்றார் [இரண்டாம் வாசகம் ]. .

பழைய ஏற்பாட்டில் எவ்வாறு மன்னா என்னும் உணவு மக்களின் உடல் பசியைத் தீர்த்ததோ [முதல் வாசகம் ] அதேபோல புதிய ஏற்பாட்டிலே மக்களின் ஆன்மப் பசியை, மனிதர்களின் ஆசைகளைத் -தீர்த்து வைக்கும் அருமருந்தாக, இயேசுவின் உடலும் , இரத்தமும் விளங்குகின்றன.

நமது மனநிலை இயேசுவின் மனநிலையாக மாற, நமது மனம் [அறிவு+ ஆசை) புதிய அறிவையும் , புதிய ஆசைகளையும் அணிந்துகொள்ள, நற்கருணை விருந்திலே நாளும் பங்கேற்போம் .

மேலும்௮றிவோம் :

எவ்வ(து) உறைவ(து) உலகம் உலகத்தோடு
அவ்வ(து) உறைவ(து) அறிவு (குறள் : 425 )

 பொருள் : உலகத்தில் சான்றோர் எவ்வாறு பிறருக்குப் பயன் தரும் வகையில் வாழ்கின்றனரோ, அவ்வாறே அவர்களைப் பின்பற்றிப் பயனுற வாழ்வதே உயர்ந்த அறிவாகும் ! 

ser ser

அன்பின் உச்சக்கட்டம் உயிர்த் தியாகம்

ஓர் இளம் பெண் தன் தோழியிடம் , “உனக்கு ஒரு பையன் காதல் கடிதம் எழுதினானே; அதை நீ என்ன செய்தாய் ?” என்று கேட் ்டதற்குத் தோழி பின்வருமாறு கூறினாள் : “அக்கடிதத்தில் நிறைய எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருந்தன. அவற்றையெல்லாம் திருத்தி அவனுக்கே அக்கடிதத்தை திருப்பி அனுப்பிவிட்டேன் .” காதல் கடிதத்தில் அன்பைப் பார்க்க வேண்டுமே தவிர எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் அது உண்மையான காதலாய் இருக்க முடியாது. கடவுன் மனிதருடைய வாழ்வில் காணப்படும் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் , அதாவது குற்றங்களையும் குறைகளையும் கண்டு அவர்களை ஒதுக்கி விடுபவர் அல்ல; மாறாக அவர்களோடு அன்பு உடன்படிக்கையைச் செய்பவரே கடவுள் . தொடக்கக் காலத்தில் அவர் இஸ்ரயேல் மக்களுடன் உடன்படிக்கை செய்தார் . அவ்வுடன்படிக்கையை அவர் மோசே வழியாகச் சீனாய் மலை அடிவாரத்தில் மிருகங்களின் இரத்தத்தினால் செய்தார் (விப 24:8). ஆனால் அந்த மக்கள் அந்த உடன்படிக்கையை மீறியபோது கடவுள் புதிய உடன்படிக்கை செய்யப்போவதாக வாக்களித்தார் (எரே 31:31). கடவுள் முன்னறிவித்த இப்புதிய உடன்படிக்கையைக் கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தினால் செய்தார் . “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை” (லூக் 22:20).

இன்று ஆண்டவருடைய திருவுடல் , திரு இரத்தத்தின் பெருவிழாவினைக் கொண்டாடுகிறோம் . நற்கருணை, கிறிஸ்துவின் உடன்படிக்கையை நினைவூட்டுகின்றது; நிலைப்படுத்துகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, நற்கருணைதான் கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சியுமாகும் (திருச்சபை, எண் 11). நற்கருணை ஒரு பொருள் அல்ல; மாறாக மீட்பின் வரலாற்றை முழுமையாகத் தன்னகத்தே கொண்டுள்ளது. நற்கருணை கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்கிறது (இறந்தகாலம் ); அகம் அருளால் நிரப்பப்படுகிறது (நிகழ்காலம் ); இனி வரவிருக்கும் நமது விண்ணக மகிமைக்கு அச்சாரமாக இருக்கிறது (எதிர்காலம் ). இவ்வாறு முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள நற்கருணை மீட்பின் வரலாற்றை, புதிய உடன்படிக்கையைக் கதிரவன் தோன்றி மறையும்வரை காலமெல்லாம் செயல்படுத்துகின்றது.

நற்கருணைப்பலி கல்வாரிப் பலியின் நீங்காத நினைவுச் சின்னம் . பழைய உடன்படிக்கையில் பலி ஒப்புக்கொடுத்த குரு வேறு; பலியாக ஓஒப்புக்கொடுக்கப்பட்ட பலிப்பொருள் வேறு; பலிப்பீடம் வேறு. இம்மூன்றிற்கும் இடையே இருந்த பிளவைக் கிறிஸ்து நீக்கிவிட்டார் . அவரே பலி ஒப்புக்கொடுக்கும் குருவாகவும் பலிப்பொருளாகவும் பலிப்பீட மாகவும் திகழ்கின்றார் . கிறிஸ்து தமது இன்னுயிரை நமக்காகக் கொடுத்தது நட்பின் வெளிப்பாடு. அவரே கூறினார் : “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவா 15:13). கிறிஸ்துவே நட்புக்குச் சிறந்த இலக்கணமாகத் திகழ்கின்றார் . அன்பின் உச்சக்கட்டம் உயிர்த் தியாகம் என்கிறார் வள்ளுவர் .

 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
 என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72).  

அன்பில்லாமல் பிறர்க்குக் கொடுக்கலாம் . எடுத்துக்காட்டாக, அன்பில்லாமல் ஒருவர்க்குப் ச்சை போடலாம் . ஆனால் கொடுக்காமல் அன்பு செய்ய முடியாது. கிறிஸ்து நம்மை அன்பு செய்தார் ; எனவே தமது உடலையும் இரத்தத்தையும் நமக்கு உணவாகவும் பானமாகவும் கொடுத்தார் .  இன்றைய நற்செய்தியில் அவர் கூறுகிறார் : “எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் . அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன் ” (யோவா 6:51).  

இன்றைய முதல் வாசகம் (இச 8:16) இஸ்ரயேல் மக்கள் மன்னாவால் உண்பிக்கப்பட்டதை நினைவுகூர்கின்றது. மன்னாவை உண்டவர் மடிந்து போயினர் ; ஆனால் நான் கொடுக்கும் உணவை உண்பவர் என்றும் வாழ்வர் எனக் கிறிஸ்து யூதர்களிடம் கூறுகின்றார் (யோவா 6:58). கிறிஸ்து கொடுக்கும் உணவாகிய நற்கருணை நமக்கு நிலைவாழ்வளிக்கும் . நாம் இறந்தாலும் கிறிஸ்து நம்மை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வார் .  

நற்கருணையை உட்கொள்ளும் நாம் பலிவாழ்வு, தியாகவாழ்வு, பகிர்வுவாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம் . கொடுத்தலிலே மூன்று வகை உண்டு. சக்கேயுவைப் போல் தனக்கு உள்ளதில் ஒரு பகுதியை மட்டும் கொடுப்பது ஒருவகை. ஏழைக் கைம்பெண்போல் தனக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்துவிடுவது இரண்டாம் வதை; கிறிஸ்துவைப் போல் தன்னையே கொடுப்பது மூன்றாம் வகை. நமக்கு உள்ளதிலிருந்தும் கொடுக்கவேண்டும் ; நமக்குள்ள எல்லாவற்றையுமே கொடுக்க வேண்டும் , ஏன் நம்மையே கொடுக்க வேண்டும் . இல்லையென்றால் , நற்கருணை வெறும் கொண்டாட்டமாக மட்டும் அமையுமே தவிர, அது நமது வாழ்க்கை முறையாக (Life Style) மாறாது!  

நற்கருணை ஒற்றுமையின் அருள் அடையாளம் என்ற கருத்தை இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் வலியுறுத்துகிறார் . அவர் கூறுகிறார் : “அப்பம் ஒன்றே; ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம் . ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் பங்கு கொள்கிறோம் ” (1 கொரி 10:17). பல கோதுமை £ மணிகள் அரைக்கப்பட்டு உருவாக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் உடலாக மாறுகிறது. ஒற்றுமையின் அருள் அடையாளமாகிய நற்கருணை நம்மிடத்தில் வேற்றுமையை உருவாக்கலாமா?

முதலில் , கணவன் -மனைவியிடையே குடும்பத்தில் ஒற்றுமை நிலவுகிறதா? நீதிமன்றத்தில் நீதிபதி ஒரு மனைவியிடம் , “ஏன் நீங்கள் உங்கள் கணவரை நாற்காலியால் அடித்தீர்கள் ?” என்று கேட்டார் , அதற்கு மனைவி, ‘ஏனெனில் என்னால் மேஜையைத் தூக்க முடியவில்லை என்றாராம் ! நற்கருணை உடன்படிக்கையைத் திருமண உடன்படிக்கையம் பிரதிபலிக்கிறது. கணவன் கிறிஸ்துவாகவம் மனைவி திருச்சபையாகவும் திகழ்கின்றனர் . வீட்டில் கணவன் - மனைவி மேஜை, நாற்காலி கொண்டு அடித்துக் கொண்டால் , உலக அரங்கில் அணுகுண்டுகள் , ஏவுகணைகள் மூலம் நாடுகள் நாடுகளை அழிக்கத் தயாராகிக் கொண்டு வருகின்றன. நாம் போரை அழிக்காவிட்டால் போர் நம்மை அழித்துவிடும் . “புதியதோர் உலகம் செய்வோம் . கெட்டப் போர்புரியும் உலகினை வேரோடு சாய்ப்போம் .” நற்கருணை மறைபொருள் நமக்கு விடுக்கும் செய்தி: பிறருக்குக் கொடுப்பதால் , நாம் பெற்றுக் கொள்கிறோம் ; பிறருக்காகச் சாவதால் , நாம் முடிவில்லா வாழ்வு பெறுகிறோம் .  

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்பின் உச்சக்கட்டம் உயிர்த் தியாகம்

ஓர் இளம் பெண் தன் தோழியிடம் , “உனக்கு ஒரு பையன் காதல் கடிதம் எழுதினானே; அதை நீ என்ன செய்தாய் ?” என்று கேட்டதற்குத் தோழி பின்வருமாறு கூறினாள் : “அக்கடிதத்தில் நிறைய எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருந்தன. அவற்றையெல்லாம் திருத்தி அவனுக்கே அக்கடிதத்தை திருப்பி அனுப்பிவிட்டேன் .” காதல் கடிதத்தில் அன்பைப் பார்க்க வேண்டுமே தவிர எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் அது உண்மையான காதலாய் இருக்க முடியாது. கடவுன் மனிதருடைய வாழ்வில் காணப்படும் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் , அதாவது குற்றங்களையும் குறைகளையும் கண்டு அவர்களை ஒதுக்கி விடுபவர் அல்ல; மாறாக அவர்களோடு அன்பு உடன்படிக்கையைச் செய்பவரே கடவுள் . தொடக்கக் காலத்தில் அவர் இஸ்ரயேல் மக்களுடன் உடன்படிக்கை செய்தார் . அவ்வுடன்படிக்கையை அவர் மோசே வழியாகச் சீனாய் மலை அடிவாரத்தில் மிருகங்களின் இரத்தத்தினால் செய்தார் (விப 24:8). ஆனால் அந்த மக்கள் அந்த உடன்படிக்கையை மீறியபோது கடவுள் புதிய உடன்படிக்கை செய்யப்போவதாக வாக்களித்தார் (எரே 31:31). கடவுள் முன்னறிவித்த இப்புதிய உடன்படிக்கையைக் கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தினால் செய்தார் . “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை” (லூக் 22:20).

இன்று ஆண்டவருடைய திருவுடல் , திரு இரத்தத்தின் பெருவிழாவினைக் கொண்டாடுகிறோம் . நற்கருணை, கிறிஸ்துவின் உடன்படிக்கையை நினைவூட்டுகின்றது; நிலைப்படுத்துகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, நற்கருணைதான் கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சியுமாகும் (திருச்சபை, எண் 11). நற்கருணை ஒரு பொருள் அல்ல; மாறாக மீட்பின் வரலாற்றை முழுமையாகத் தன்னகத்தே கொண்டுள்ளது. நற்கருணை கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்கிறது (இறந்தகாலம் ); அகம் அருளால் நிரப்பப்படுகிறது (நிகழ்காலம் ); இனி வரவிருக்கும் நமது விண்ணக மகிமைக்கு அச்சாரமாக இருக்கிறது (எதிர்காலம் ). இவ்வாறு முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள நற்கருணை மீட்பின் வரலாற்றை, புதிய உடன்படிக்கையைக் கதிரவன் தோன்றி மறையும்வரை காலமெல்லாம் செயல்படுத்துகின்றது.

நற்கருணைப்பலி கல்வாரிப் பலியின் நீங்காத நினைவுச் சின்னம் . பழைய உடன்படிக்கையில் பலி ஒப்புக்கொடுத்த குரு வேறு; பலியாக ஓஒப்புக்கொடுக்கப்பட்ட பலிப்பொருள் வேறு; பலிப்பீடம் வேறு. இம்மூன்றிற்கும் இடையே இருந்த பிளவைக் கிறிஸ்து நீக்கிவிட்டார் . அவரே பலி ஒப்புக்கொடுக்கும் குருவாகவும் பலிப்பொருளாகவும் பலிப்பீட மாகவும் திகழ்கின்றார் . கிறிஸ்து தமது இன்னுயிரை நமக்காகக் கொடுத்தது நட்பின் வெளிப்பாடு. அவரே கூறினார் : “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவா 15:13). கிறிஸ்துவே நட்புக்குச் சிறந்த இலக்கணமாகத் திகழ்கின்றார் . அன்பின் உச்சக்கட்டம் உயிர்த் தியாகம் என்கிறார் வள்ளுவர் .

 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
 என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72).  

அன்பில்லாமல் பிறர்க்குக் கொடுக்கலாம் . எடுத்துக்காட்டாக, அன்பில்லாமல் ஒருவர்க்குப் ச்சை போடலாம் . ஆனால் கொடுக்காமல் அன்பு செய்ய முடியாது. கிறிஸ்து நம்மை அன்பு செய்தார் ; எனவே தமது உடலையும் இரத்தத்தையும் நமக்கு உணவாகவும் பானமாகவும் கொடுத்தார் .  இன்றைய நற்செய்தியில் அவர் கூறுகிறார் : “எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் . அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன் ” (யோவா 6:51).  

இன்றைய முதல் வாசகம் (இச 8:16) இஸ்ரயேல் மக்கள் மன்னாவால் உண்பிக்கப்பட்டதை நினைவுகூர்கின்றது. மன்னாவை உண்டவர் மடிந்து போயினர் ; ஆனால் நான் கொடுக்கும் உணவை உண்பவர் என்றும் வாழ்வர் எனக் கிறிஸ்து யூதர்களிடம் கூறுகின்றார் (யோவா 6:58). கிறிஸ்து கொடுக்கும் உணவாகிய நற்கருணை நமக்கு நிலைவாழ்வளிக்கும் . நாம் இறந்தாலும் கிறிஸ்து நம்மை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வார் .  

நற்கருணையை உட்கொள்ளும் நாம் பலிவாழ்வு, தியாகவாழ்வு, பகிர்வுவாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம் . கொடுத்தலிலே மூன்று வகை உண்டு. சக்கேயுவைப் போல் தனக்கு உள்ளதில் ஒரு பகுதியை மட்டும் கொடுப்பது ஒருவகை. ஏழைக் கைம்பெண்போல் தனக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்துவிடுவது இரண்டாம் வதை; கிறிஸ்துவைப் போல் தன்னையே கொடுப்பது மூன்றாம் வகை. நமக்கு உள்ளதிலிருந்தும் கொடுக்கவேண்டும் ; நமக்குள்ள எல்லாவற்றையுமே கொடுக்க வேண்டும் , ஏன் நம்மையே கொடுக்க வேண்டும் . இல்லையென்றால் , நற்கருணை வெறும் கொண்டாட்டமாக மட்டும் அமையுமே தவிர, அது நமது வாழ்க்கை முறையாக (Life Style) மாறாது!  

நற்கருணை ஒற்றுமையின் அருள் அடையாளம் என்ற கருத்தை இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் வலியுறுத்துகிறார் . அவர் கூறுகிறார் : “அப்பம் ஒன்றே; ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம் . ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் பங்கு கொள்கிறோம் ” (1 கொரி 10:17). பல கோதுமை £ மணிகள் அரைக்கப்பட்டு உருவாக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் உடலாக மாறுகிறது. ஒற்றுமையின் அருள் அடையாளமாகிய நற்கருணை நம்மிடத்தில் வேற்றுமையை உருவாக்கலாமா?

முதலில் , கணவன் -மனைவியிடையே குடும்பத்தில் ஒற்றுமை நிலவுகிறதா? நீதிமன்றத்தில் நீதிபதி ஒரு மனைவியிடம் , “ஏன் நீங்கள் உங்கள் கணவரை நாற்காலியால் அடித்தீர்கள் ?” என்று கேட்டார் , அதற்கு மனைவி, ‘ஏனெனில் என்னால் மேஜையைத் தூக்க முடியவில்லை என்றாராம் ! நற்கருணை உடன்படிக்கையைத் திருமண உடன்படிக்கையம் பிரதிபலிக்கிறது. கணவன் கிறிஸ்துவாகவம் மனைவி திருச்சபையாகவும் திகழ்கின்றனர் . வீட்டில் கணவன் - மனைவி மேஜை, நாற்காலி கொண்டு அடித்துக் கொண்டால் , உலக அரங்கில் அணுகுண்டுகள் , ஏவுகணைகள் மூலம் நாடுகள் நாடுகளை அழிக்கத் தயாராகிக் கொண்டு வருகின்றன. நாம் போரை அழிக்காவிட்டால் போர் நம்மை அழித்துவிடும் . “புதியதோர் உலகம் செய்வோம் . கெட்டப் போர்புரியும் உலகினை வேரோடு சாய்ப்போம் .” நற்கருணை மறைபொருள் நமக்கு விடுக்கும் செய்தி: பிறருக்குக் கொடுப்பதால் , நாம் பெற்றுக் கொள்கிறோம் ; பிறருக்காகச் சாவதால் , நாம் முடிவில்லா வாழ்வு பெறுகிறோம் .  

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நற்கருணைக்குப் பொருள் காண...  

விடுதலை பற்றி பாரதி வீரமுழக்கமிட்டான் - “பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் ” என்று. ஆனால் ஒருவருக்கும் பயப்படாமல் கட்டுப்பாடற்று வாழ்ந்தால் ஒருவன் கெட்டுப்போக மாட்டானா? யாரையாவது தலைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டாமா?  

ஆனால் எப்போர்ப்பட்ட தலைவனை?  

ஒரு கட்சித் தலைவரின் தொண்டர்கள் ஒருநாள் தங்கள் கொடிக் கம்பத்தைத் தரையில் நட்டு அதன் உயரத்தைக் கண்டுபிடிப் பதற்காக ஒருவர் தோள் மேல் ஒருவர் ஏறி நின்று ஸ்கேல் வைத்து அளந்து கொண்டிருந்தனர் . இதைக்கண்ட பெரியவர் ஒருவர் “இத்தனை நேரம் கம்பம் தரையில் தானே கிடந்தது. அப்பொழுது அதன் நீளத்தை அளந்திருக்கலாமே” என்றார் . அதற்குத் தொண்டர்கள் “எங்கள் தலைவர் கம்பத்தின் உயரத்தை அளக்கச் சொன்னாரேயன்றி அதன் நீளத்தை அல்ல” என்று பதில் சொன்னார்கள் . தலையில் அடித்துக் கொண்ட பெரியவர் தலைவரைச் சந்தித்து “உங்கள் தொண்டர்கள் இப்படி இருக்கிறார்களே” என்று கேட்டதற்கு “அவர்கள் அப்படி இருப்பதால் தான் நான் அவர்களுக்குத் தலைவனாய் இருக்கிறேன் என்று சொன்னாராம் .  

பொம்மைகளை, மண்ணுகளை, மக்குகளை, அறிவுச் சூனியங்களை வைத்துச் சமாளிக்கலாம் என்று நினைப்பவன் தலைவன் அல்ல கயவன் !  

நல்ல தலைவன் வேண்டும் என்று பாரதிக்குத் தெரியாதா? அதனால் தான் அடுத்த வரியிலேயே “பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் ” என்று பாடினார் . அந்தப் பரிபூரணனைத்தான் இன்று நாம் நற்கருணையில் காணுகிறோம் . அந்தத் தலைவன் நமக்காகத் தன்னையே பலியாக்கி அதன் வழித் தன்னையே உணவாக்கி நம்மோடு உறைபவன் , உடனிருப்பவன் .  

இன்று நற்கருணைக்குப் பொருள் காண வேண்டும் என்றால் அது திருச்சபையின் பின்னணியில் மட்டுமே சாத்தியம் . நற்கருணை என்பது திருச்சபைக்காக மட்டுமே இயேசு தந்தது. நல்லவனோ கெட்டவனோ, நர்த்திகனோ ஆத்திகனோ, நம்பிக்கை உள்ளவனோ நம்பிக்கை அற்றவனோ, எல்லாருக்காகவும் இயேசு பலியானார் . ஆனால் நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டுமே உணவானார் . நம்பிக்கை யாளர்களின் கூட்டம்தானே திருச்சபை!

உலகத் திருச்சயை இயல்பாலும் பண்பாலும் கொண்டிருக்கும் அம்சங்கள் இரண்டு.

1 பயணம் போகும் திருச்சபை 2. பணி புரியும் திருச்சபை.

இந்தக் கண்ணோட்டத்தில்தூான் நற்கருணை அர்த்தம் பெறும் .

1. பயணம் போகும் திருச்சபை;

வாழ்க்கை என்பது ஒரு பயணம் . நாமெல்லாம் வழிப்போக்கர்கள் . “நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை. வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம் ”. (எபி.13:14). தெளிவான இலக்குத்தான் . திடமான பயணம் தான் . எனினும் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் சோகமும் சோர்வும் அலுப்பும் களைப்பும் விரக்தியின் விளிம்புக்கே தள்ளுகின்றன. “வாழ்ந்து என்னத்தக் கண்டோம் . செத்துப் போகலாம் போல இருக்கு”. நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு மட்டுமல்ல. எலியா போன்ற இறைவாக்கினர்களுக்கே ஏற்பட்ட உணர்வு இது.

அரசி ஈசபேலின் கொலை வெறிக்குத் தப்பி ஒரேப் மலைநோக்கி ஓட வாழ்ந்தது போதும் என்ற உணர்வோடு வழியில் படுத்துவிடுகிறார் . வானதூதர் வந்து “எழுந்து சாப்பிடு. ஏனெனில் நீ நீண்டபயணம் செய்ய வேண்டும் ” (1 அரசர் 19:4-8) என்று சொல்லித் தந்த அப்பத்தினால் வலிமை பெற்று 40 பகல் 40- இரவுப் பயணத்தை மேற்கொண்டார் .

எம்மாவு சீடர்களின் கண்கள் திறந்தது இயேசு அப்பத்தைப் ிட்கும் போது தானே! “அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம் ” (லூக் .24:20) என்ற வரியில் சொனிக்கும் சோகம் மறைந்து உற்சாகம் அன்றோ அடைந்தனர் !

நமக்கும் வாழத் தேவையான வலிமையும் நம்பிக்கையும் நற்கருணையே தரும் . வாழ்வு தரும் உணவு, சாகா வரம் தரும் உணவு என்றால் என்ன பொருள் . நற்கருணையை அருந்தியவர்கள் சாகாமல் இருப்பார்கள் என்றா பொருள் ? “உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்ட போதிலும் இறந்தனர் ” (யோவான் 6:49). இயேசு சொல்லித்தானா நமக்கு இது தெரியும் ? ஏன் , நமது முன்னோரெல்லாம் | நம்மைவிட ஆழ்ந்த நம்பிக்கையுடன் நற்கருணையில் பங்கேற்றார்களே, அவர்கள் சாகாமலா இருக்கிறார்கள் ? அதாவது மன்னாவை உண்டும் மோசே உட்பட எவரும் இலக்கை அடையவில்லை. வாக்களிக்கப்பட்ட | நாட்டுக்குள் நுழையவில்லை. ஆனால் இயேசுவை உண்பவர்கள் | இலக்கை அடைவார்கள் .

வாழ்க்கையின் சோர்வுகளில் மதுவை, நஞ்சை, தூக்குக் கயிற்றை நாடுகிறோம் . நற்கருணையை நாடியிருக்கிறோமா?

நற்கருணை பயணத்தின் வழியுணவு மட்டுமல்ல. பயண முடிவில் : உயிர்ப்பின் உறுதிப்பாடு. மகிமையின் அச்சாரம் . “என்னை உண்பவர்   என்றுமே சாகார் .

2. பணி செய்யும் திருச்சபை

எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. “Service is the rent you pay for your life on earth”, நீ இங்கே வாழ வந்ததற்காகத் தருகிற வாடகைதான் நீ செய்வதாகச் சொல்லுகிற சேவை. இயேசு நம் தலைவர் என்றால் ஏற்றிருந்த பதவியால் அல்ல, | ஆற்றி வந்த பணியால் . பணி வாழ்வே பலிவாழ்வாக இருந்ததால் . இயேசுவின் திருச்சபையில் தலைமை என்பது தொண்டு, “மானிட மகன் . தொண்டு ஏற்பதற்கல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார் ” (மார்க் .10:45) மனிதகுல மீட்புக்காகத் தன் உயிரை விலையாகக் கொடுத்தார் . தன் உடலை உணவாகக் கொடுத்தார் . தன் இரத்தத்தைப் பலியாகக் கொடுத்தார் .

பணிக்கு நிறைவு தருவது பணியில் வெளிப்படும் பணிவு, தாழ்ச்சி, தியாகம் . பணிவு இல்லாத பணி அழிவில் கொண்டு நிறுத்தும் . அதன் அடையாளமாகத்தான் இறுதி இரவு உணவு வேளையில் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவினார் . “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் | நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப் .- பட்டிருக்கிறீர்கள் (யோவான் 13:14)

பணி நோக்குடைய - சமுதாய ஈடுபாட்டை உணர்த்தும் ஆன்மீகமே நற்கருணை சுட்டிக்காட்டும் ஆன்மீகம் .

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா

இயேசு சபையின் முன்னாள் தலைவர் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், முதல் உலகப்போர் நிகழ்ந்த காலத்தில், ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், இளம் துறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு, ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை இளம் துறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த இல்லம் முழுவதும் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அந்தக் கோவிலில், அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்வாறு எழுதியுள்ளார்:

"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்தப் பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் திருவிழா.

நம்மில் பலர், சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம். அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குதந்தையர் அல்லது அருள்சகோதரிகள் நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப் பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். இந்தக் கதைகள், இன்னும் நம் நினைவுகளில் தங்கியிருந்தால், அவை, இன்னும் நம் வாழ்வில், தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறு பெற்றவர்கள்.

குழந்தைகளாய் நாம் இருந்தபோது கற்றுக்கொண்ட பல பாடங்கள், இன்னும் நம் வாழ்வில், பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றன. வயதில் நாம் வளர்ந்த பின், சிந்திப்பதிலும் பல மாற்றங்களை உணர்ந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள், நமது குழந்தைப் பருவச் சிந்தனைகளைவிட சிறந்தவை என்று எப்போதும் சொல்லிவிட முடியாது. பல வேளைகளில், நாம் குழம்பிப்போயிருக்கும்போது, குழந்தைகளைப் போல் எளிதான முறையில் சிந்திக்க முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறோம். பல நேரங்களில் வயதில் வளர்ந்தவர்களுக்கு, குழந்தைகள் பாடங்கள் சொல்லித் தருகின்றனர். சென்ற வாரம் மூவொரு இறைவனைப் பற்றி புனித அகஸ்டினுக்கு கடற்கரையில் ஒரு சிறுவன் சொல்லித்தந்த பாடத்தைப்பற்றி சிந்தித்தோம். இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திரு உடல், திரு இரத்தம் திருவிழாவுக்குத் தேவையான பாடத்தை, மற்றொரு குழந்தையின் வழியே பயில முயல்வோம். நாம் சந்திக்கப் போகும் குழந்தை, அன்பு மருத்துவர் (Doctor Love) என்று புகழ்பெற்ற பேராசிரியர் லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்ற ஒரு குழந்தை.

அதிக அன்பு காட்டிய குழந்தை யார் என்று தீர்மானிக்க, ஒருமுறை பேராசிரியர் லியோ அவர்களை நடுவராக நியமித்தனர். பல குழந்தைகள் இந்தப் போட்டிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் செய்த மிக அன்பு நிறைந்த செயல்கள் பேராசிரியர் லியோ அவர்களிடம் விவரிக்கப்பட்டன. அக்குழந்தைகளில், ஒரு 4 வயது சிறுவன், மிக அன்பு காட்டிய சிறுவன் என்று, பேராசிரியர் லியோ அவர்கள் தேர்ந்தெடுத்தார். அந்தச் சிறுவன் என்ன செய்தான்?

அச்சிறுவனின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர். ஒரு நாள் மாலை அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்த அச்சிறுவன், அந்த முதியவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்டநேரம் சென்று, சிறுவன் மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா, அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டார். சிறுவன் அம்மாவிடம், "ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில உக்கார்ந்திருந்தேன்" என்று சொன்னான்.

அச்சிறுவனின் செயலைப் பாராட்டிய பேராசிரியர் லியோ அவர்கள், அதிக அன்பு காட்டிய குழந்தை என்ற பரிசை அச்சிறுவனுக்கு வழங்கினார். எவ்விதத் தயக்கமும் இல்லாமல், அந்த முதியவரின் மடியில் உரிமையோடு ஏறி அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன், இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் திருவிழாவின் உட்பொருளை நமக்கு சொல்லித் தருகிறான்.

அன்பை, ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்பு கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம், வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

எப்படி நம் இறைவன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்வியை விட, அவர் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று, சென்ற வாரம் சிந்தித்தோம். அதேபோல், எப்படி, அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கிறார் என்ற கேள்விக்கு இறையியல் விளக்கங்கள் தேடுவதற்குப் பதில், இயேசு, ஏன் அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கவிழைந்தார் என்பதை உணர்ந்துகொள்வது நமக்குப் பயனளிக்கும்.

ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும், இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட, எளிய உணவுப் பொருட்கள். எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது, நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று புரிந்துகொள்கிறோம். எளிய வடிவங்கள், அவருக்குப் பிடித்த வடிவங்கள். எளிய உணவில், நாம் தினமும் உண்ணும் உணவில், நம் உடலாகவே மாறி, நம்மை வாழவைக்கும் உணவில், இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது, நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இணைபிரியாமல், எப்போதும் மனித குலத்துடன் தங்கியிருப்பதற்கு இயேசு இந்த வழியைத் தெரிவு செய்தார்.

தங்களுடன், தங்களுக்குள், இறைமகன் இயேசு தங்கியிருக்கிறார் என்ற அந்த உணர்வால், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை அவருக்காக அர்ப்பணித்தனர். அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வு இதோ: 17ம் நூற்றாண்டில், கானடாவில், பழங்குடியினரிடையே பணிபுரிந்து, அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் (Isaac Jogues) அவர்களும் ஒருவர். அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டு, அவர் தன் இரு கரங்களிலும், கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார்.

அக்காலத்திய மரபின்படி, இயேசுவின் திரு உடலை, கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் மட்டுமே தொடமுடியும் என்று, திருஅவையின் திருவழிபாட்டு சட்டங்கள் இருந்ததால், அவ்விரல்களை இழந்திருந்த அருள்பணி ஐசக் அவர்கள், திருப்பலி நிறைவேற்ற, திருத்தந்தையிடமிருந்து சிறப்பு உத்தரவு பெறவேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் Urban அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர், திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும், கிண்ணத்தையும், விரல்கள் குறைந்த தன் கரங்களில் அருள்பணி ஐசக் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும். தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் திருநாளன்று, நாமும், மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளை, இறைமகன் நமக்குச் சொல்லித்தர வேண்டுமென்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நாம் பலராயினும், ஒரே உடலாயிருக்கிறோம்

உயர்வு தாழ்வு வேண்டாம்

ஆஸ்திரியாவில் சீஃபீல்ட் (Seefield) என்ற இடத்தில் ஒரு கிறிஸ்தவக் கோயில் உள்ளது. இங்கே ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலி நடந்துகொண்டிருந்தது. திருப்பலியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் அங்கிருந்த சாதாரண மக்களே. அதே திருப்பலியில் ஒரு நிலப்பிரபும் கலந்து கொண்டான்.

அவன் அருள்பணியாளர் மக்களுக்கு நற்கருணையை வழங்கும் சமயத்தில், அவரிடம், “இந்தப் பகுதியில் வாழும் மக்களில் நான்தான் பெரிய ஆள். அதனால் எனக்கு எல்லாருக்கும் வழங்கும் நற்கருணையை வழங்க வேண்டாம். திருப்பலியில் பயன்படுத்தப்பட்ட பெரிய நற்கருணையைத் தான் வழங்கவேண்டும். அதுவும் பீடத்தில் வைத்துத்தான் எனக்கு நற்கருணை வாழவேண்டும்” என்றான். “அப்படியெல்லாம் தரமுடியாது” என்று அருள்பணியாளர் சொன்னபோது அவரைக் கொன்றுவிடுவது போல் வெறித்துப் பார்த்தான் அவன். இதனால் அருள்பணியாளர் அவனுடைய சினத்திற்கு ஏன் ஆளாக வேண்டும் என்று அவனைப் பீடத்திற்கு அழைத்தார்.

பின்னர் அவர் பெரிய நற்கருணையை எடுத்து, அவனுடைய நாவில் வைத்தார். அவனால் அதை விழுங்க முடியவில்லை. அதைவிடவும், அதிலிருந்து இரத்தம் வழிந்து தரையில் விழவே, அவன் பதறிப் போனான், இதனால் அருள்பணியாளர் அவனுடைய நாவில் இருந்த நற்கருணையை எடுத்தார். அதில் ஐந்து காயங்கள் இருந்ததால் அவர் இன்னும் அதிர்ந்து போனார். இதற்கு நடுவில் தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதை உணர்ந்த நிலப்பிரவு அருள்பணியாளரிடம் மன்னிப்புக் கேட்டான்.

அருள்பணியாளர் நிலப்பிரவுவின் நாவில் வைத்த அந்த நற்கருணையானது அதே கோயிலில் இன்றும் மக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நற்கருணை சமத்துவத்தின் அடையாளம், ஒற்றுமையின் அடையாளம், ஒன்றிப்பின் அடையாளம். அதை உட்கொள்கின்ற ஒருவர் தம்மோடு வாழும் சகோதரர் சகோதரிகளை பிரித்துப் பார்த்தால், அவரை விடவும் இழிவான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இன்று நாம் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று நாம் சிந்திப்போம்.

மன்னாவால் வாழ்வளித்தவர்

சமீபத்தில் அரசாங்கம் ‘பன்னிரண்டு மணிநேரம் வேலை’ என்ற சட்டத்தைக் கொண்டு வந்து, அதனை மக்களிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பினால் திரும்பப் பெற்றுக்கொண்டது. எட்டு மணி நேர வேலை என்று சொல்லிக்கொண்டு, அதை விடவும் கூடுதலான நேரம் வேலையை நிறுவனங்கள் வாங்கும்போது, பன்னிரண்டு மணிநேரம் வேலை என்றொரு சட்டம் நடைமுறைக்கு வந்தால், நிறுவனங்கள் எவ்வளவு மணிநேரம் வேலை வாங்கும் என்று நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை

இன்றைக்கே தொழிலாளர்களின் – மக்களின் – நிலைமை இப்படியிருக்கும்போது இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தபோது, அவர்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இஸ்ரயேல் மக்கள் செய்து வந்த கடுமையான வேலையினால் அவர்களது வாழ்வே கசந்து போனது. (விப 1:14). இதையெல்லாம் கண்ணுற்ற கடவுள், அவர்கள்மீது பரிவு கொண்டு (விப 3: 7), அவர்களை மோசேயின் தலையில் எகிப்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை நோக்கி அழைத்துச் சென்றார். வழியில் அவர்களுக்கு மன்னாவை வழங்கி வாழ்வளித்தார். இத்தகையதொரு மாபெரும் செயலைச் செய்திருக்கும் கடவுள் மறக்க வேண்டாம் என்கிறது இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம்.

தன்னுடைய உடலால் நிலைவாழ்வு

மன்னாவை உண்ட மக்கள் இறந்து போனார்கள். ஆனால், விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவாகிய என்னை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகின்றார்.

இயேசு சொன்னதை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்கள் எப்போதுமே மேம்போக்காகப் புரிந்து கொண்டார்கள். அவர் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று பேசியபோதும் (யோவா 3:4), வாழ்வளிக்கும் தண்ணீரைப் பற்றிப் பேசியபோதும் (யோவா 4:15) அதுதான் நடந்தது. இயேசு, “என் சதையை உணவாகக் கொடுக்கின்றேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கின்றேன்” என்று சொன்னபோது, “நாம் உண்பதற்கு இவர் சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்று அவரது சீடர்களிடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது. இதற்கு முக்கியமான் காரணம், “இரத்தத்தை அருந்த வேண்டாம்” (இச 12:16; லேவி 17: 10-14) என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டதாலேயே.

சீடர்கள் மேம்போக்காகப் புரிந்துகொண்டதைப் போல், இயேசு தன் சதையையும் இரத்தத்தையும் அப்படியே உட்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாகத் தன்னுடைய வார்த்தையையும் விழியங்களையும் உள்வாங்கி, அதன்படி வாழவேண்டும் என்கிறார். அவ்வாறு வாழ்பவர் நிலைவாழ்வைப் பெறுவர் என்கிறார் இயேசு

வேற்றுமையைக் களைந்து ஒன்றுபட்டு வாழ்வோம்

இயேசுவின் வார்த்தையின்படி, அவரது விழுமியத்தின்படி வாழ்கின்ற ஒருவர் நிலைவாழ்வைப் பெறுவார் என்று நாம் சிந்தித்தோம். இயேசுவின் விழுமியம் என்ன என்கிற தெளிவினை இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தருகின்றார்.

கொரிந்து நகரில் ஏழை, பணக்காரன், யூதர், பிறவினத்தார் என்று பல்வேறு பிரிவினர் இருந்தனர். இவர்கள் இயேசுவின் திருவிருந்தில் கலந்து கொண்டபோதும், அவரது திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொண்ட போதும் ஒற்றுமையுடன் வாழாமல் பிரிந்தே கிடந்தார்கள். இதனால் அவர்களிடம் பவுல், “நாம் பலராயினும் ஒரே உடலாயிருக்கின்றோம்” என்ற செய்தியை வலியுறுத்திக் கூறுகின்றார்.

கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவைக்குத் தலையாக இருப்பவர் இயேசு கிறிஸ்து. அவருடைய திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொண்டு, அவரது உடலின் உறுப்புகளாக இருப்பவர்கள் நாம். அப்படியிருக்கையில், நாம் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று வேறுபாடு பார்ப்பதும், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதும் கிறிஸ்துவை இழிவு படுத்துகின்ற செயல்கள்.

இன்றைக்கும் கூட ஒருசில இடங்களில் கிறிஸ்துவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொள்கின்ற கிறிஸ்தவர்கள் சக கிறிஸ்தவர்களை வேறுபடுத்திப் பார்ப்பதும், பிரித்துப் பார்ப்பதும் வேதனையளிக்கின்றது. ஆகையால், கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த இந்த நாளில், பெயருக்குக் கிறிஸ்தவர்களாய் வாழாமல், கிறிஸ்துவின் விழுமியத்திற்கு ஏற்ப, அனைவரும் சகோதரர் சகோதரிகள் ஒன்ற உணர்வோடு வாழ்வதற்கு உறுதி ஏற்போம்.

சிந்தனைக்கு

“விண்ணகத்தை அடைவதற்கு எளியதும் பாதுகாப்பானதுமான வழி நற்கருணையே” என்பார் புனித பத்தாம் பயஸ். ஆகையால், நாம் விண்ணகத்தை அடைவதற்குக் கடவுள் தந்திருக்கும் நற்கருணை உட்கொள்வதோடு நின்றுவிடால், அது குறித்துக் காட்டும் விழுமியங்களின் படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser