புனித கசிமீர்
சந்தியாகு
கசிமீர் போலந்து நாட்டின் அரச குலத்தில் 1458 ஆம் ஆண்டு பிறந்தார். போலந்து நாட்டு அரசனின் 13 பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையாகத் தோன்றினார். அரச அரண்மனையில் வளர்ந்த போதிலும் சுக போகங்களை வெறுத்து, ஒறுத்தல் முயற்சிகளை நேசித்தார். அனைவரையும் சகோதரர் களாகவும், தமக்குச் சமமானவர்களாகவும் மதித்தார்.
திருப்பலி, திவ்விய நன்மை, இயேசுவின் பாடுகள், கடவுளின் கன்னித்தாடீநு மீது அதிக பக்தி கொண்டிருந்தார். சிறுவயது முதலாக தன்னையே கடுமையாகக் கட்டுப்படுத்தி வாடிநந்தார். தரையில் படுத்து உறங்குவார். கோவில் கதவுகள் பூட்டப்ட்டு இருந்தாலும் வெளியே முழந்தாளிட்டு இரவில் நெடு நேரம் செபிப்பார்.
அங்கேரி நாட்டினர் தங்கள் அரசனிடம் அதிருப்தி அடைந்தனர். அப்போது அண்டை நாடாகிய போலந்தின் மன்னராக இருந்த கசிமீரின் தந்தையிடம் வற்புறுத்திக் கேட்டதன் பேரில் கசிமீர் அங்கேரி நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
எனினும் இவர் அரச பதவி ஏற்க வேண்டிய இடத்தை அடைந்ததும் அரசருக்கும், மக்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள் சரிப்படுத்தப்பட்டன என்று அறிந்து மகிடிநச்சியுடன் தன் நாடு திரும்பினார். அப்போது இவருக்கு வயது 15 தான். கசிமீர் போலந்து நாட்டின் அரச குலத்தில் 1458 ஆம் ஆண்டு பிறந்தார். போலந்து தந்தைக்கு இவர் திரும்பியது பிடிக்கவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்பு தனது தந்தை லித்துவேனியா நாட்டிற்குச் சென்று அங்கே இரண்டு ஆண்டுகள் தங்கி விட்ட பொழுது போலந்து நாட்டின் அரச பொறுப்பை ஏற்று 1481 முதல் 1483 வரை வெகு சிறப்பாக ஆட்சி செடீநுதார்.
கசிமீர் இறுதிவரை திருமணம் செடீநுது கொள்ளாதவராகவே இருந்தார். இவர் தனது வாடிநநாளில் மரியன்னையின்மீது மேலான பக்தி, பற்றுதல் கொண்டிருந்தார். தேவதாயை "என் நல்ல தாடீநு" என்பார்.
"தினமும் வாடிநத்துவோம் ஓ மரியே" என்ற மரியன்னைக்குரிய கீதத்தை அடிக்கடி பாடிப் பரவசமடைவார். இப்பாடலின்மீது இவருக்கிருந்த பற்றுதல் எவ்வளவெனில், தாம் இறந்தபின் தனது சட லத்துக்கருகில் இந்தப் பாட்டு எழுதப்பட்ட ஏடு வைக்க வேண்டுமென விரும்பினார். உயிரைவிட பரிசுத்த கற்பை அதிகம் மதித்து வந்தார்.
1484 ஆம் ஆண்டு தனது 26வது வயதில் காசநோயால் இறந்தார். இவர் இறந்து 122 ஆண்டுகளுக்குப்பின் இவரது கல்லறையைத் திறந்தபோது இவரது உடல் அழியாதிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அன்னை மரியாவின் கீதத்தைத் தாங்கிய ஏடும் அழியாமல் காணப்பட்டது. போலந்து, லித்துவேனியா நாடுகளின் பாதுகாவலராக புனித கசிமீர் போற்றப்பட்டு வருகிறார்.
புனிதரின் திருநாள் மார்ச் 04


