தவக்காலம்-தீஸ்மாஸ்

திருமதி பவானி - சென்னை-24

"தவம் என்றால் பற்று நீங்கிய வழிபாடு. உடலை வாட்டிக் கடவுளின் பால் மனதை நிறுத்தல்", என்று தமிழ் அகராதியில் விளக்கம் தரப்பட்டுள்ளது. விவிலியக் குறிப்புகளில் தவம் அதாவது உண்ணா நோன்பு இறைவனின் பாதுகாப்பு வேண்டியும், தங்களின் தவறுக்குக்கு மனம்வருந்தும் சடங்காகவும், இறைவன் முன் தங்களின் பணியினைக் காட்டும் செயலாகவும் காட்டப்பட்டுள்ளது.

யோனா 3:5 நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி எல்லோரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். வரவிருக்கும் கடவுளின் தண்டனையைத் தடுத்து நிறுத்த நோன்பு இருந்தார்கள். லூக்கா 18:12 வாரத்தில் இருமுறை உண்ண நோன்பிருப்பதாகப் பரிசேயர் வரிதண்டுபவர் உவமையில் பரிசேயர் கூறுவதாக அமைந்துள்ளது. தி.ப 13:2 அந்தியோக்கிய திரு அவை "நோன்பிருந்து வழிபடப் போது" பர்னபாவையும் பவுலையும் தனிப்பட்ட பணிக்கு இறைவன் அழைத்துள்ள செய்தி கிடைக்கப் பெறுகிறார்கள்”. .

theemass

புனித தீஸ்மாஸ் (நல்ல கள்வன்) இயேசு கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்ட மனம் மாறிய நல்ல கள்வன் ஆவார். இவர் இயேசுவின் தெய்வீகத்தை ஏற்றுக் கொண்டு, தன் பாவங்களுக்கு வருந்தி, சிலுவையிலேயே மன்னிப்புப் பெற்று இயேசுகிறிஸ்துவுடன் விண்ணகம் சென்றார். இறந்து நினைவு நாள் மார்ச் 25 ல் கொண்டாடப்படுகிறது.

"இன்றே நீ என்னோடு வான் வீட்டில் இருப்பாய்" என்று இயேசு கிறிஸ்துவால்நேரடியாகப் பரலோக வாக்குறுதி பெற்றவர்.
பாவம் செய்தாலும், இறுதி நேரத்தில் வாழ்வின் கடைசி கட்டத்தில், உண்மையாக மனம் வருந்தினால் மன்னிப்பு உண்டு என்பதற்கு அடையாளமாகப் புனித தீஸ்மாஸ் போற்றப்படுகிறார்.

இத்தவக்காலத்தில் பொருளுள்ள தவச் செயல்களைச் செய்ய நாம் முயற்சிக்கலாம். நமக்குப் பிடிக்காத குணம் கொண்டவர்களைச் சகித்துக் கொண்டு வாழலாம். நமது உணவு பழக்கங்களில் கெமிக்கல் நிறைந்த உணவான (குளிப்பானங்கள்) தவிர்க்கலாம். மருந்துவ மனைகளுக்குச் சென்று நோயுற்றோருக்கு உதவி செய்யலாம், தவக்காலம் நம்மைப் புதுப்பிக்கும் காலம். பயனுள்ளதாக மாற்றுவோம்.

நாம் எதை மற்றவர்களுக்குக் கொடுகிறோமோ, அதுவே நமக்குத் திரும்ப வரும். கோபத்தைக் காட்டினால், கோபமே திரும்ப வரும். அன்பையும், புன்னகையும் கொடுத்தால், நமக்கு மகிழ்ச்சியே திரும்ப வரும். சிந்தித்து செயல் படுவோம். இயேசு கிறிஸ்துவுக்கே புகழ்! மரியன்னையே வாழ்க.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது