அருள்வாக்கு இன்று

டிசம்பர் 31-சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 1:1-18

இன்றைய புனிதர்

புனித முதலாம் சில்வெஸ்தர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.யோவான் 1:12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் அவரில் நம்பிக்கை கொள்பவருக்கு இறைவனின் பிள்ளை ஆகும் உரிமை வழங்கினார். நாம் திருமுழுக்கினால் அவரது மறையுடலானோம். அவரின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையினால் அவரது உரிமை சொத்தாக மாறுகின்றோம். நமது விசுவாசம் ஒவ்வொருவரின் உள்ளததின் ஆழத்தில் ஊன்றப் பட வேண்டும், என்றும் நமக்கு அவரே ஒளி அவரே நாம் பாதை – வாழ்வும் – வழியும் அவரே என்பதை உணர்ந்தவர்களய் அவரது போதனைகளைச் சாதனைகளாக மாற்றி அடுத்தவரின் நலனுக்கா தம்மையே அழித்து வாழும் பேற்றினை யாம் பெற்றிடுவோம். அன்றே நாம் அவரது பிள்ளைகளாகவும், உரிமை சொத்தாகவும் இருக்கின்றோம் என்பதை முழுமையாக ஏற்போம்.

சுயஆய்வு

  1. நான் ஆண்டவரின் உரிமை சொத்து என்பதை உணர்கின்றோனா?
  2. என் நம்பிக்கை எத்தகையது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்று உமக்கே சொந்தம் எனக்குள்ளவைகள் அனைத்தும் உனக்கே சொந்தம் என அறிக்கையிட வரம் தரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு