அருள்வாக்கு இன்று

டிசம்பர் 30-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 2:13-15,19-23

இன்றைய புனிதர்

புனித சபினுஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

திருக்குடும்பம் பெருவிழா
அருள்மொழி:

யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். மத்தேயு 2:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் குழந்தை இயேசுவை யோசேப்பும் மரியாவும் எகிப்துக்கு தூக்கிச் சென்றதை திருகுடும்ப விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். குழந்தையும் வளர்ந்தது. இன்றைய சூழலில் அனேக குடும்பங்களில் பிளவுகள், பிரச்சனைகள் இருப்பதை நாம் காண்கின்றோம். இப்படிபட்ட சூழலிலிருந்து விடுபட்டு இயேசுவின் நசரேத்தூர் திருக்குடும்பமாக நாம் வாழ முயற்சிக்க வேண்டும். அன்று இயேசு தாய் - தந்தை தச்சுவேலை செய்து அமைதியாக நிறைவோடு வாழ்ந்தனார். எந்தப் பொருள் சேர்ப்பும் - பகை சேர்ப்பும் இல்லமால் வாழ்ந்தார்கள். நீதியின் நிமித்தமும், நேர்மையுடனும் வாழ்ந்தர்கள். அவர்கள் குடும்பம்போல் நாம் குடும்பம் மாறாதா? என்றும் நாம் இறைமகனின் சாட்சிகளாக வாழ்வோம்.

சுயஆய்வு

  1. என் குடும்ப நிலை என்ன?
  2. எனக்கு அடுத்து இருப்பவரின் நிலையை உணர்கின்றோனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என் ஆசா பாசங்களை துறந்து பிறர் வாழ நான் என்னை அர்பணிக்க வரம் தரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு