அருள்வாக்கு இன்று
டிசம்பர் 29-வியாழன்
இன்றைய நற்செய்தி
லூக்கா 2:22-35
இன்றைய புனிதர்

புனித தாமஸ் பெக்கெட்
லூக்கா 2:22-35
புனித தாமஸ் பெக்கெட்
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். லூக்கா 2:33
இன்றைய நற்செய்தியில் நீதிமான் சிமியோன் கூறியவற்றை மனதில் வைத்துச் சிந்தித்து வியப்புற்று கொண்டிருந்தனர். தாய் மரியாளும் தந்தை யோசேப்பும் இவ்வுலக மாந்தரின் துயர் துடைக்க வந்த இக்குழந்தை மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் ஆற்றலால் இப்புவி வந்திறங்கி நம் கரங்கள் அதை வளர்க்கும் பேறு பெற்றோமே என்று தாயும் தந்தையும் செய்வதறியாது வியப்புற்றிருந்தனர். இறைவனின் திட்டத்தில் நாமும் ஒரு சிறு கருவியாகத் திகழ்வதை நினைத்துப் பேருவகை கொண்டனர். எனவே குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பேணி வளர்த்தனர். மழலையும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்தார்.
அன்பு மழலை மன்னவா! உம்மைப் போல அனைத்து குழந்தைகளையும் பேணி காக்கும் வரம் தாரும். ஆமென்