அருள்வாக்கு இன்று
டிசம்பர் 28-புதன்
இன்றைய நற்செய்தி
இன்றைய புனிதர்

புனித மாசில்லா குழந்தைகள் Feast of the Holy Innocents
புனித மாசில்லா குழந்தைகள் Feast of the Holy Innocents
ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.மத்2-16
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பொருட்டு தன் உயிரைக் கொடுத்த மாசில்லா குழந்தைகளின் விழாவைக் கொண்டாடுகின்றது. பல உயிர்களைக் காக்க இவ்வுலகம் வந்து உதித்த மழலை மன்னவனை கொன்றுவிட்டால் இன்று பலகோடி உயிர்கள் நிலை என்னவாகியிருக்கும் சற்று சிந்தியுங்கள். அன்று இந்தப் பச்சிளங் குழந்தைகள் தங்கள் உயிரைக் கொடுத்து நம் மீட்பர் இயேசுவை காத்தனர். இது மாபெரும் தியாகச் செயல். இறைமகன் இவ்வுலகில் வாழ்ந்த 33 வருடங்களும் கடந்து பல அயிரம் ஆண்டுகள் வந்தும் இன்றும் கிறிஸ்து என்னும் நாமம் பூமியின் ஒரு கோடி முனை முதல் மறுகோடி முனை மட்டும் பரவிக் கிறிஸ்துவ சமயம் ஓங்கி நிற்பதற்கு மூல காரணம் இந்த மாசற்ற குழந்தைகளே! எனவே நீதியை நிலை நாட்ட நமக்கு என்ன தொல்லைகள் வந்தாலும் நம்மையே இழக்கவும் தயாராக இருப்போமா?
அன்பு இயேசுவே! நான் குழந்தைகளை அன்பு செய்து அவர்களுக்கு நல்வழிகாட்டியாக வாழும் வரம் அருளும். ஆமென்.