அருள்வாக்கு இன்று

டிசம்பர் 24-சனி

இன்றைய நற்செய்தி

லூக்கா 1:67-79

இன்றைய புனிதர்

புனித ஆடெல்St. Adele

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது. ; லூக். 1:78-79

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் வாழ்வில் இருளிலும் இறப்பின் பிடியிலும் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒளிச் சூழ்ந்த அருள் வாழ்வில் பிரகாசிக்கவும் அமைதியின் பாதையில் நடந்து செல்லவும், நம் கடவுள் தம் மக்களைக் காக்கும் பொருட்டுத் தன் மகனை மரியின் மைந்தனாகப் பிறக்கச் செய்த நாளே இந்நாள்! இவ்வுலகின் ஒளியை மிளிரச் செய்த நாள். இறைமகன் மானிடரின் துயர் துடைக்க விடியலாக மண்ணகம் தேடி வந்த நாள். இந்நாளே உலக மாந்தர் மகிழ்வூட்டும் நாள். இந்நாளை இறைமகனின் பிறந்த நாளாக இன்று கொண்டாடி மகிழ்கின்றோம். எனவே இறைமக்களாகிய நாம் அடுத்தவரின் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம்.

சுயஆய்வு

  1. கிறிஸ்து பிறப்பு எனக்கு விடுக்கும் செய்தி என்ன?
  2. நான் இந்நாளின் மேன்மையை உணர்ந்துள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! மழலை மன்னவனாக என் இதயக் குடிலில் சங்கமிக்க வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு