அருள்வாக்கு இன்று

டிசம்பர் 23-வெள்ளி

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்

கண்டி நகர் புனித யோவான்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ”இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். லூக்கா 1:63

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைவன் தன் மைந்தனுக்கு முன்னோடியாகத் தேர்ந்து கொள்ளப்பட்ட திருமுழுக்கு யோவானைச் சக்கரியா எலிசபெத் தம்பதியரின் வாயிலாக இவ்வுலகிற்கு வெளிப்படுத்துகின்றார். அதாவது சித்தனாக வேடமணிந்து வெட்டுகிளியும், காட்டுத் தேனும் உண்டு மேடு பள்ளங்களைச் சமன்படுத்துபவராகக் வருகின்றார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வானத்தூதர் வாயிலாக அருள்வாக்குப் பெற்று இவ்வுலகை அழிவுப் பாதையினின்று வென்று வந்த மகான்களே திருமுழுக்கு யோவான் அடுத்து மரியின் வழியாக இவ்வுலகைக் காத்து இன்றும் என்றும் மாறாத தேவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் இறைமகன் ஆவார். இவர்கள் பாதையை நாமும் பின்பற்றி முத்திரைப் பதிக்கவே அழைப்பு விடுக்கின்றது.

சுயஆய்வு

  1. அழைப்பு எத்தகையது என்பதனை உணர்ந்துள்ளேனா?
  2. பெற்றுக் கொண்டதை உணர்ந்துப் பணிசெய்கின்றேனா

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மைப் போல் பொறுமையுடன் களப் பணியாற்ற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு