அருள்வாக்கு இன்று
டிசம்பர் 22-வியாழன்
இன்றைய நற்செய்தி
லூக்கா 1:46-56
இன்றைய புனிதர்

புனித பிரான்சிஸ்கா சேவிரா கப்ரினி
லூக்கா 1:46-56
புனித பிரான்சிஸ்கா சேவிரா கப்ரினி
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமை படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகைக் கொள்கின்றது. லூக்கா 1:47
இன்றைய நற்செய்தியில் மரியாவுக்கு இறைவன் தந்தப் பேருவகையை எண்ணி மரியா அகமகிழ்ந்து போற்றிப் புகழ்ப்பாடல் பாடுகின்றார். தன்னை ஒரு சாதாரணப் பெண்ணாக நினைத்திருந்த மரியாளுக்கு இந்த நிகழ்வுப் பேருவகையைக் கொடுக்கின்றது. எனவே தான் மரியா அகமகிழ்ந்து இறைவனைப் போற்றிப் பாடுகின்றாள். ஆனால் இறைவனின் பார்வையில் மரியா தன் மக்களைச் சாத்தானின் பிடியினின்று மீட்டெடுக்கச் சிறந்த கருவியாகவும் தன் மக்களுக்கும் தனக்கும் ஒரு வாய்க்காலாக அன்னை மிகைப்படுத்துகின்றார் இறைவன். ஆம் அன்பர்களே! இறைதிட்டத்திற்கு நாம் நம்மையே அளிக்க முன்வரும்போது நாமும் உயர்த்தபடுவோம்.
அன்பு இயேசுவே! நான் என்றும் உம் பணிக்குத் தயார் என்ற மனபக்குவத்தை என்னில் ஊன்றச் செய்யும். ஆமென்.