அருள்வாக்கு இன்று

டிசம்பர் 21-புதன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 1:39-45

இன்றைய புனிதர்

புனித பீட்டர் கனிஷீயஸ் St. Peter Canisius

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.” லூக்கா 1:44

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் தாய் கன்னி மரியா யூதேயா மலைநாட்டில் உள்ள எலிசபெத்தை வாழ்த்த விரைந்து செல்கின்றார். அவரது வாழ்த்துரையைக் கேட்டதும் அவள் வயிற்றில் உள்ள குழந்தை அக்களிப்பால் துள்ளியது. ”ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் பேறு பெற்றது எப்படி?” என்ற வரிகளும் மரியாவை ஆனந்த மழையில் நனைந்து ”என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது.” என்ற பாடலைத் தனை மறந்து பாடுகின்றார். அதே வேளை மரியாவின் வாழ்த்துரைக் கேட்ட எலிசபெத்தின் குழந்தையும் -இறைமகனும் அக்களிப்பால் துள்ளும்போது யோவான் தன் ஜென்மபாவத்தைத் தன் கருவறையிலேயே கழுவி கொண்டார். இவ்விரு நிகழ்வுகளும் மனித வரலாற்றைப் புனிதபடுத்த இறைவனால் தேர்ந்து அளிக்க மீட்பின் மாபெரும் திருநிகழ்வாகும்.

சுயஆய்வு

  1. வாழ்த்துச்செய்தி வழங்கியவரை அறிகிறேனா ?
  2. வாழ்த்தைப் பெற்றுக் கொண்டவரை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு மழைலை இயேசுவே! உமது பிறப்பின் மேன்மைப் புரிந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு