அருள்வாக்கு இன்று

டிசம்பர் 20-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 1:26-38

இன்றைய புனிதர்

சீலோஸ் புனித தோமினிக்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.” என்றார். லூக்கா 1:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் மரியாவுக்குக் கபிரியேல் வானத்தூதர் தோன்றி "ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்" என்று மங்களச் செய்தியை வழங்குகின்றார். இந்த நிகழ்வு முக்காலத்திற்கும் முத்திரைப் பதிக்கின்றது. இறைமைந்தன் மனிதனாக இவ்வுலகில் பிறக்க இறைவன் வரைந்த வண்ண ஓவியமே அன்னை மரியாள். உலகம் படைக்கும் போதே தான் படைக்கும் இவ்வையகம் அழிவுப் பாதைக்குச் செல்லும் இதனை வென்றெடுக்க மீட்பின் கருவியாக மரியாவைத் தேர்ந்து கொண்டார். அந்நிகழ்வே தாவீதின் வழி வந்த மரியாளுக்கு வழங்கப்படுகின்றது. ஆண்டவர் உம்முடனே என்ற செய்தித் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு வானதூதரின் வார்த்தைகளை "ஆகட்டும்" என்று தாழ்மையோடு ஏற்றுக் கொண்டதில் பேறுபெற்றவராகின்றார் மரியா.

சுயஆய்வு

  1. அருள் என்ற வார்த்தையின் பொருளை உணர்ந்துள்ளேனா?
  2. அதற்கேற்ற வாழ்வு வாழ எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! அருள் வரங்களின் ஊற்றே உமது தாயின் அருளை எமக்கும் பொழிந்து வழி நடத்தும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு