அருள்வாக்கு இன்று
டிசம்பர் 19-திங்கள்
இன்றைய நற்செய்தி
லூக்கா 1:5-25
இன்றைய புனிதர்

புனித அலெக்ஸாண்ட்ரியாவின் நெமிசியஸ்
லூக்கா 1:5-25
புனித அலெக்ஸாண்ட்ரியாவின் நெமிசியஸ்
நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். லூக்கா 1:14
இன்றைய நற்செய்தியில் சக்கரியாவுக்கு அருளப்பட்ட மங்களச் செய்தியாகும் - "நம்பினோர் கெடுவதில்லை" நான்மறை தீர்ப்பாகும். நம்பாததினால் சக்கரியா குழந்தை பிறந்து பெயர் சூட்டும் வரை பேசாதிருந்தார். இது இறைவனின் திட்டமாகும். எலிசபெத்-சக்கரியா தன் முதிர்ந்த வயதில் இறை திட்டத்திற்கு தேர்ந்துக் கொள்ளப்படுகின்றார்கள். அக்குழந்தை கருவிலேயே தூய ஆவியால் ஆட்கொள்ளபடுகின்றது. ஆம் அன்பர்களே! நாமும் தாயின் கருவிலேயே பெயர் சொல்லி அழைக்கப்படுள்ளோம் என்பதனை முழுமையாக விசுவசித்து அதன்படி வாழ அழைக்கப்படுள்ளோம் என்பதை உணர்ந்து வாழ்வோம். இங்கே சாதி, சமயம், இனம் என்பது கிடையாது. அனைவரையுமே இறைவன் பெயர் சொல்லி அழைக்கின்றார். ஏற்போம். பேருவகை கொள்வோம்.
அன்பு இயேசுவே! என்னையும் தாயின் கருவிலேயே பெயர் சொல்லி அழைத்த மேன்மைக்காகப் பேருவகை கொள்ளும் வரம் தாரும். ஆமென்.