அருள்வாக்கு இன்று
டிசம்பர் 18-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
மத்தேயு 1:18-24
இன்றைய புனிதர்

புனித வினிபால்ட்
மத்தேயு 1:18-24
புனித வினிபால்ட்
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி,"யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். மத்தேயு 1:20
இன்றைய நற்செய்தியில் மரியா கருவுற்றிருந்தது யோசேப்புக்குத் தெரிய வந்தது. யோசேப்பு நேர்மையாளர். எனவே மரியாவை மறைவாக விலக்கிவிடத் தீர்மானித்தார். அவ்வேளையில் வானதூதர் யோசேப்பின் கனவில் தோன்றி "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.” என்றதும், யோசேப்புத் தூக்கத்திலிருந்து எழுந்துத் தூதர் பணித்தவாறே மரியாவை ஏற்றுக் கொண்டார். ”கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பார்” என்று எசாயா வாயிலாகக் கடவுள் உரைத்தது மரியின் வழியாக மீட்பர் ஒருவர் நமக்காக மாட்டுத்தொழுவமதில் தோன்றினார் என்பதே வறியோரின் வாழவாதாரம் உயர்த்திடவே மனுமகன் மாட்டுத்தொழுவமதில் தம் பிறப்பைப் பதிவு செய்தார்.
அன்பு இயேசுவே! உமது மண்ணக வருகையின் நோக்கத்தை நான் உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.