அருள்வாக்கு இன்று

டிசம்பர் 17-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 1:1-17

இன்றைய புனிதர்

புனித ஒலிம்பியாஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு: தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு: பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு. மத்தேயு 1:17

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் ஆபிரகாம் முதல் தாவீது வரை பொற்காலம் என்று போற்றப்பட்டவர்கள் அட்டவணையில் வழித் தோன்றலாக இயேசு மெசியாவாகத் தோன்றுகின்றார். இவருக்கு முன்பு கடவுளின் திட்டத்தில் இரத்தம் சிந்திச் சரித்திரம் படைத்துள்ளனர். இந்த அட்டவணையில் அமைந்துள்ள 17 சொற்றொடர்களிலே செதுக்கப்பட்டுள்ள 48 மனிதப் பெயர்கள் இயேசுவின் முன்னோடிகள். இவர்கள் ஆளுமையிலும், ஆன்மீகத்திலும், குருதியிலும் கடவுளின் திட்டத்தில் சங்கமித்தவர்கள். அதனால் இன்று அவர்களது வரலாற்றை நாம் வாசிக்கின்றோம். ஆம் அன்பர்களே! நாளை நாம் இந்த வரலாறாக மாற இயேசு அழைப்பு விடுக்கின்றார்.

சுயஆய்வு

  1. வரலாற்றின் அட்டவணை நான் புரிந்துள்ளேனா?
  2. அதன்படி நான் வாழ எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! இந்தச் சமுதாயத்தில் உம் சித்தத்தை நிறைவேற்றும் வேட்கையும் தாகமும் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு