அருள்வாக்கு இன்று
டிசம்பர் 13-செவ்வாய்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 21:28-32
இன்றைய புனிதர்

புனித லூசி
மத்தேயு 21:28-32
புனித லூசி
”இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே“ என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.“ மத்தேயு 21:31
இன்றைய நற்செய்தியில் இயேசு, தந்தையின் விருப்படி முதன் முதலாக வந்த திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி வாழ்ந்தவரே இறையாட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதை ஆணித்தரமாகச் சொல்கின்றார். இரண்டு மகன்கள் உவமை வாயிலாக. ஆம் அன்பர்களே! நாமும் இன்றைய சூழலில் இறைமகனின் வாழ்வை சிரமேற் கொண்டு அடுத்தவருக்காய் நாம் துன்புறும்போது இறையாட்சியை நாமும் சுவைப்போம். அடுத்தவருக்கும் அளிப்போம் என்பதே இன்றைய உவமையின் கருப்பொருள் என்பதை ஏற்போம்.
அன்பு இயேசுவே! இறையாட்சியின் கருபொருளை உணர்ந்து வாழ்வில் கடைபிடிக்க வரம் தாரும். ஆமென்.