அருள்வாக்கு இன்று

டிசம்பர் 12-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 21:23-27

இன்றைய புனிதர்

புனித குவாதெலுப் அன்னை

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்." மத்தேயு 21:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அகம் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் அயோக்கியர்களைப் பார்த்துக் கேட்கின்றார். நீங்கள் எத்தகைய மன நிலையில் என்னிடம் கேள்வி கேட்கின்றீர்கள்? உங்கள் தீயச்செயல்களை மறைப்பதற்கு மற்றவர்களின் நற்செயல்களைக் கண்டித்து அவர்களது நல்ல செயல்களை மறைக்கப் பார்க்கின்றீர்கள். நீங்கள் என்ன தான் உமது தீய எண்ணங்களை மறைத்து அடுத்தவரின் நலன்களைத் தேடுத்தாலும் உண்மை ஒருகாலும் அழியாது. நீதி, நேர்மை மேலோங்கி நிற்கும் எனறு இயேசு இங்கே சாடுகின்றார். எனவே அன்பர்களே நாமும் நீதிக்காகத் துணிந்து நிற்போம்.

சுயஆய்வு

  1. இறைபணியாற்ற எதிர்படும் சவால்களை ஏற்கும் மனம் கொண்டுள்ளேனா?
  2. அல்லது துணிந்துச் செயல்படுகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எந்த நிலையிலும் அடுத்தவருக்காக என்னையே அர்ப்பணிக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு