அருள்வாக்கு இன்று

டிசம்பர் 11-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மத்தேயு 11:2-11

இன்றைய புனிதர்

புனித தமஸ்கு Pope Saint Damasus I

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“என்னைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்” என்றார். மத்தேயு 11:6

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு தன் செயல்களனைத்தையும் காண்பவர்பள் தயக்கமின்றி இவரே மெசியா என்று ஏற்றுக் கொள்பவர்கள் பேறுபெற்றோர்.என்று கூறுகின்றார். எவ்வாறு எனில் இறைமகன் வருகை இவ்வுலகில் அடிமட்டத்தில் துன்புறுவோருக்காக என்பதை காணும்போது அறிந்தனர் சிலர். பலர் அறியவில்லை. இன்றும் பலர் இவ்வுலக சுகபோகம் பெரிது. மறுவுலகை பற்றிச் சிந்தனையின்றி உல்லாச வாழ்க்கையில் உள்ளனர். நாம் வாழும் இவ்வுலகம் நிலையற்றது என்பதை உணராதவர்களுக்கு இறைமகனின் போதனைகள் ஒரு வரப்பிரசாதமாகும். அந்தஆம் சகோதர சகோதரிகளே நமக்கு அடுத்திருப்பவரின் ஏழைகளின் வாழ்வில் கவனம் செலுத்தும்போது பேறுபெற்றவர் ஆகின்றோம். நாம் சற்று இயேசுவின் போதனைகளைச் சிந்தித்து செயல் வடிவம் தருவாமா?

சுயஆய்வு

  1. நான் எனது கடமை என்ன என்பதை உணர்கின்றேனா?
  2. உணர்ந்தவற்றை என் வாழ்வில் கடைப்பிக்கின்றனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உமது மறையுடலின் ஒரு நரம்பு என்பதை உணர்ந்து அதன்படி வாழ வரமருளும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு