அருள்வாக்கு இன்று
டிசம்பர் 10-சனி
இன்றைய நற்செய்தி
மத்தேயு 17:10-13
இன்றைய புனிதர்

புனித மூன்றாம் கிரகோரி
மத்தேயு 17:10-13
புனித மூன்றாம் கிரகோரி
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: "எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள் என்றார். மத்தேயு 17 :12
இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு உண்மை போதகர்களை மக்கள் கண்டுணராம் இருந்த போக்கைக் கண்டிக்கின்றார். எனக்கு முன் ஒருவர் மேடுபள்ளங்களை சமன்படுத்துவார் என்று இயேசு கூறியதை மக்கள் உணரவில்லை. ஆம் இன்றும் உண்மை போதகர்களை மக்கள் கண்டுணராமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். காரணம் தாங்கள் செய்த குற்றங்களின் விளைவு என்னவாக இருக்குமோ என்று ஓடி அலைகின்றார்கள். கொஞ்சம் தங்கள் மனம் விட்டுக் கதறுவதால் தங்கள் உணர்ச்சிகள் தணிவதாக நம்புகின்றார்கள். அது மீண்டும் சுமையாவதை உணர்வதில்லை. ஆனால் உண்மை இறைவனை தரிசிக்க வேண்டுமானால் அமைதியில் தியானித்து வாழ்வில் செயல்படுத்தும் நமது உணர்வுகளுக்கு விடை கிடைக்கும். இதை இறைவனும் அறிவார்.
அன்பு இறைவா! நான் உண்மை கடவுளைக் காணும் வரத்தைத் தாரும்.ஆமென்.