அருள்வாக்கு இன்று
டிசம்பர் 8-வியாழன்
இன்றைய நற்செய்தி
இன்றைய புனிதர்

புனித கன்னி மரியாவின் அமலோற்பவம்
புனித கன்னி மரியாவின் அமலோற்பவம்
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார். லூக்கா 1: 38
இன்றைய நற்செய்தியில் வானத்தூதரின் மங்களச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மரியாவின் அச்சமும் அதற்கு வானத்தூதரின் பதிலும், மரியாவை உம் வார்த்தையின்படியே என்று ஏற்றுக் கொளளவைத்தது. வானத்தூதரின் வார்த்தையை ஏற்றுக் கொண்ட மாத்திரத்தில் "வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிக்கொண்டார்". இந்த மகத்தான செயலுக்கு மரியாவின் தாழ்ச்சி இவ்வுலகின் பெரும் மாற்றத்தை உருவாக்கி ஒட்டு மொத்த மனித இனத்திற்கு விடுதலை பெற்றுத் தந்தது. தொடர்ந்து நமக்கும் இவ்வார்த்தை அளிக்கப்படுகின்றது. நாமும் அடுத்தவருக்காக நம்மையே அளிக்க முன்வருவோம்.
அன்பு இயேசுவே! நான் தாழ்ச்சியை ஆடையாகக் கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்.