அருள்வாக்கு இன்று

டிசம்பர் 7-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 11:28-30

இன்றைய புனிதர்

புனித அம்புரோஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

மேலும் அவர், பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11: 28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைமகன் பெருஞ்சுமை- அதாவது பாவம் என்ற சேற்றுலும்- துன்பத்திலும் துவண்டு போய் உள்ளங்களை அழைக்கின்றார். அன்று கைம்பெண் (நயீன் பட்டிணம்) தன் ஓரே மகனை இழந்து புலம்பி மாளத் துயரில் வருகின்றார். இயேசுவின் பார்வை அந்தப் பாடை மீத விழுகின்றது. பாடையும் கீழே நம்பிக்கைகோடு இறக்கப்படுகின்றது. இந்தக் கைம்பெண்ணின் துயரைக் கண்டு இறைமகன் பாடையை தொட்டு மகனே எழுந்திரு என்று மீண்டும் அவனுக்கு உயிர் தருகின்றார். இங்வே அனாதையாக, கண்ணீரோடு நின்ற கைம் பெண்ணுக்கு இளைப்பாற்றித் தருகின்றார். ஆம் சகோதரர்களே நாமும் எந்தத் துயரத்திலும் நம்பிக்கையோடு இறைவன் பாதம் நம்மைக் கையளிக்கும்போது இளைப்பாற்றித் தருகின்றார்.

சுயஆய்வு

  1. நான் என் நிலையை உணர்கின்றேனா?
  2. உணர்ந்து அதற்கான முயற்சியை எடுக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என் துன்பவேளையில் உம் பாதம் சரணடையும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு