அருள்வாக்கு இன்று
டிசம்பர் 5-திங்கள்
இன்றைய நற்செய்தி
லூக்கா 5:17-26
இன்றைய புனிதர்

புனித ஜெரால்டு
லூக்கா 5:17-26
புனித ஜெரால்டு
அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன "என்றார். லூக்கா 5-20
இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு முடக்கு வாதக்காரனின் ஆழ்ந்த விசுவாசத்தை பார்க்கின்றார். தன்பாவங்களை உணர்ந்து மனம் வருந்திவரும்போது இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது சரி என்றே இயேசு நமக்கு உணர்த்துகின்றார். தவறுச் செய்பவர் தவறை செய்யமாட்டோம் என்ற நிலை வரும். அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை நாமும் உணர வேண்டும். நமக்கு வரும் துன்பம், இன்பம் அனைத்தையும் இறைவன்பால் வைப்போம். முழுமனதுடன் வாழ்வோம். அப்போது இறைமகன் நமக்குள் இருந்து செயலாற்றுவார் என்பதை திண்ணம்.
அன்பு இயேசுவே! என் குற்றங்களை நான் சீர்த்தூக்கி பார்க்கும் வரம் அருளும். ஆமென்.