அருள்வாக்கு இன்று
டிசம்பர் 4-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
மத்தேயு 3:1-12
இன்றைய புனிதர்

தமாஸ்கஸ் நகர புனித யோவான்
மத்தேயு 3:1-12
தமாஸ்கஸ் நகர புனித யோவான்
அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்று பறைசாற்றி வந்தார். மத்தேயு 3:2-3
இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் அன்றைய சூழலில் தடம் புரண்டுபோன யூதமக்களின் மனமாற்றத்திற்கு இறைமகனின் முன்னோடியாக வருகின்றார். ஆம் நாமும் திருமுழுக்கு பெற்ற இறைமகனின் மறையுடலாக இருக்கின்றோம். இதில் ஒரு சிறு நரம்பு பமுதானாலும் உடல் அனைத்திற்குமே வலி தெரியும். எனவே நாம் இயேசுவின் திருவுடல் என்பதை உணர்ந்தவர்களாய் நமது ஒவ்வொரு நிமிடத்தையும் நம்மைச் சுற்றிறிருக்கும் வறியோருக்கதகவும் செலவழிப்போம். நாம் மனம் மாறி இறைவன்பால் இணைவோம். ஒருவருக்கொருவர் குற்றங்குறைகளை மன்னித்து அன்பு செய்வோம். அப்போது தான் நம் பாவங்களுக்குப் பாவமன்னிப்பு பெறுவோம் என்பது திண்ணம்.
அன்பு இயேசுவே! மனம் மாறி விண்ணரசை எதிர்கொள்ள என்னில் மாற்றத்தை உருவாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.