அருள்வாக்கு இன்று

டிசம்பர் 3-சனி

இன்றைய நற்செய்தி

மாற்கு 16:15-20

இன்றைய புனிதர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். மாற்கு 16:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, நற்செய்தியைப் பறைச்சாற்ற மத் சீடர்களை அனுப்புகின்றார். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைச்சாற்றுங்கள்-நம்பிக்கைக் கொள்வோர் மீட்புப் பெறுவர் என்று தம் சீடர்களை அனுப்புகின்றார். அவர்களோடு பேசியபிறகு விண்ணேற்றம் அடைந்தார். தந்தையின் வலப்புறம் அமர்ந்தார். சீடர்கள் புறப்பட்டுச் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றினார். நம்பிக்கைக் கொண்டு திருமுழுக்கு பெற்றோர் மீட்பு அடைந்தனர். ஆண்டவரின் உடனிருப்பு அவர்களில் ஒளிர்ந்தது. இன்றுவரை ஆண்டவரது திருப்பெயரின் பொருட்டு ஏறெடுக்கும் செயல்கள் அனைத்திலும் கிறிஸ்துவின் உடனிருப்பை உணர முடியும்.

சுயஆய்வு

  1. நற்செய்தியை பறைச்சாற்ற எனது முயற்சி யாது?
  2. நற்செய்தியின் பொருட்டு எனது தியாகம் என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! திக்கெட்டும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு