அருள்வாக்கு இன்று
டிசம்பர் 2-வெள்ளி
இன்றைய நற்செய்தி
மத்தேயு 9:27-31
இன்றைய புனிதர்

புனித பிபியானா
மத்தேயு 9:27-31
புனித பிபியானா
அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து,"நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம், ஐயா" என்றார்கள். மத்தேயு 9:28
இன்றைய நற்செய்தியில் இயேசு, பார்வையற்ற இருவருக்குப் பார்வைக் கொடுக்கின்றார். எப்படிஎனில் இயேசுவின் வருகையை அறிந்து கொண்ட அந்த இருவரும் இவர் தான் வாழ்வில் ஒளி ஏற்றக்கூடியவர். நம் கண்கள் இவர் வாயிலாகத் தான் பார்வை பெற முடியும் என்று முழுமையாக நம்பிக்கையில் இருந்தவர்கள். எனவே தான் அவர் எப்போது வருவார் என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் இறைமகன் வருவதைக் தெரிந்து கொண்ட இருவரும் “தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும்” என்ற கத்திக் கொண்டே வந்தனர். இதனைக் கண்ணுற்ற இறைமகன் “நான் இதைக் செய்ய முடியும் என்று நம்புகின்றீர்களா?” என்று கேட்கின்றார். அதற்கு “ஆம் ஐயா” என்றதும், உமது நம்பிக்கையின்படியே பார்வை பெறுங்கள். இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றார்.
ஆண்டவரே! உமது வார்த்தை என்னில் அழியா நம்பிக்கையூட்டும் ஒளியாகிடும் வரம் தாரும். ஆமென்.