அருள்வாக்கு இன்று

டிசம்பர் 1-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 7:21,24-27

இன்றைய புனிதர்

புனித எட்மண்ட் கேம்பியன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மத்தேயு 7:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவாக்கு விழுமியங்களின் மனநிலையைச் சுட்டிக்காட்டுகின்றார். காரணம் அனைவரும் இறைவார்த்தையைப் படிக்கின்றோம் - கேட்கின்றோம். அதன்படி வாழ்கின்றோமா? என்றால் அது கேள்விக்குறித் தான். இறைவாக்கு என்பது ஆழ்மனதில் அது பதிவுச் செய்யப்பட்டால் அது வீரியமுள்ள நல்விதையாக வீறுக்கொண்டு முளைத்து ஒன்றுக்கு நூறு மடங்கு விளைச்சலைக் கொடுக்கும் ஞானவிருட்சமாகும் என்பதை மனதில் பதிவு செய்வோம். இயேசுவின் போதனைகள் அனைத்தும் நலருள் விதைகளாக நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வளரட்டும். அப்போது தான் நாம் பாறைமீது கட்டப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பாவோம். என்ன உலகப் பேராசைகள் - செல்வங்கள் நம்முன்னே நின்றாலும், அவற்றைக் கையாள்வதில் இறைவனின் இரக்கச் செயல்கள் நம் கண்முன்னே தோன்றும்.

சுயஆய்வு

  1. நான் எத்தகைய அடிதளமாக உள்ளேன்?
  2. இறைவாக்கு என்னில் பதிந்துள்ளதை அறிகிறேனா?

இறைவேண்டல்

இரக்கமே உருவான எம் இயேசுவே! உமது போதனைகளின் வாழ்வின் அடிதளமாகிடும் வாழ வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு