அருள்வாக்கு இன்று
நவம்பர் 8-வெள்ளி
இன்றைய நற்செய்தி
லூக்கா 16:1-8
இன்றைய புனிதர்
புனித காட்ஃப்ரே
லூக்கா 16:1-8
புனித காட்ஃப்ரே
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால்,தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். லூக்கா 16:8
இன்றைய நற்செய்தியில் இயேசு, முன்மதியுடன் செயல்பட நமக்கு அழைப்பு விடுக்கின்றார். காரணம் இன்றைய சூழலிலும் சரி கடன்பட்டவரிகளிடம் ஒன்று - பத்து - நூறு வட்டி வாங்கிக் கடன்பட்டோரைத் துன்புறுத்தும் நிலை மேலோங்கும் வேளையில் உவமை வாயிலாக வீட்டுப் பொறுப்பாளர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை அறிந்து கொள்ளப் பொறுப்பாளரிடம் கணக்கை ஒப்படைக்கவும் என்ற கண்டிப்புடன் கேட்கின்றார். தலைவரின் மனதைப் புரிந்து கொண்ட பொறுப்பாளர் கடன்பட்டவர்கள் கணக்கைச் சரிபார்த்துக் குறைத்த கணக்கைக் கட்டித் தலைவரின் பாராட்டைப் பெறுகின்றார். காரணம் நேரம் காலம் அறிந்துத் தகுந்த வேளையில் கடன்காரர்களின் மீது சுமத்தப்பட்ட கடனைத் தள்ளுபடிச் செய்து உண்மைக் கடனைக் கணக்கிட்டுக் காட்டியதால் முன்மதியோடும் செயல்ப்பட்டதால் இறைமகனின் அன்பைப் பெறுவோம்.
அன்பு இயேசுவே! ஒளியின் மக்களாக நான் வாழ முன்மதியோடு வாழ வரம் தாரும். ஆமென்