அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு31-புதன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 4:38-44

இன்றைய புனிதர்

புனித ரேமண்ட் நொன்னாட்டூஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். லூக்கா 4: 40

வார்த்தை வாழ்வாக:

மண்ணுலகில் நான் எதையெல்லாம் செய்தோனோ அதையெல்லாம் நீங்களும் செய்யுங்கள் என்று இயேசு நமக்கு அழைப்பு விடுகின்றார். இயேசு இவ்வுலகில் வரும் போது பொன்னோ, பொருளோ கொண்டுவரவில்லை. மாறாகத் தன் தந்தையையே தன்னுடன் கொண்டு வந்தார். தந்தையின் விருப்பத்தை முழுமையாகச் சமுதாயத்தில் தன் பாணியில் கடந்துச்சென்று பணியாற்றி அழிவினின்று தம் மக்களை மீட்டுக் கொண்டார். பல புதுமைகளையும் செய்தும் பல பிணியாளர்களைக் குணமாக்கினார். எனவே நாமும் இயேசுவின் நாமத்தை நம்முள் பதித்து அவரது அன்புக் கட்டளையை ஏற்போமா?

சுய ஆய்வு

  1. நான் இயேசுவின் சழுகப் பணியை உணர்ந்துள்ளேனா?
  2. அவரது கட்டளையின் படி வாழப் பணிச் செய்ய முனைகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது சித்தத்தின்படி நாங்கள் வாழவும், உமது விமுமியங்களை வாழ்வாக்கவும் வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு