அருள்வாக்கு இன்று

ஆகஸ்டு 28-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

லூக்கா 14:1,7-14

இன்றைய புனிதர்

புனித அகஸ்டீன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். லூக்கா 14:11

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு விருந்தினருக்கும் வருந்து அளிப்போருக்கும் அறிவுரை வழங்குகின்றார். அதாவது அழைப்பு பெற்றவர்கள். எவ்வாறு நடந்து கொண்டால் நாம் எப்படி உயர்த்தி பெருமிதமாக நடந்துக் கொள்ளும்போது நாம் எவ்வாறு அவமதிக்கப்படுவோம். என்பதற்கு நமக்கு நல்போதனையை முன் வைக்கின்றார். நம்மை படைத்த நம் தலைவன் மனிதன் எப்படி வாழவேண்டும். மற்றவர் மத்தியில் நாம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று அறிவுரைகளை திறந்து வைக்கும் அருள்களஞ்சியமாக விட்டு சென்றிருப்பதை இன்றைய நற்செய்தியின் வாயிலாக அறிந்து சுவைத்து அடுத்தவருக்கும் பகிர்ந்த நமத தரத்தை நாமே உயர்த்திக் கொள்ள இன்றைய போதனை அழைப்பு விடுக்கின்றது.

சுய ஆய்வு

  1. தம்மைத்தாமே தாழ்த்துவோர் நிலை உணர்கின்றோமா?
  2. தம்மைத்தாமே உயர்த்துவோர் நிலை என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எத்தகைய புகழ்ச்சிக்கும் அடிமையாகாமல் எளிய மனதினைக் கொண்டு வாழ வரம் தாரும். ஆமென்..

அன்பின்மடல் முகப்பு